Published:Updated:

``என்கிட்ட மூணு ஆக்‌ஷன் கதைகள் இருக்கு" - அஜித்தை பாலிவுட்டுக்கு அழைக்கும் போனி கபூர்!

``என்கிட்ட மூணு ஆக்‌ஷன் கதைகள் இருக்கு" - அஜித்தை பாலிவுட்டுக்கு அழைக்கும் போனி கபூர்!
``என்கிட்ட மூணு ஆக்‌ஷன் கதைகள் இருக்கு" - அஜித்தை பாலிவுட்டுக்கு அழைக்கும் போனி கபூர்!

போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துவரும் படம், 'நேர்கொண்ட பார்வை'. இது, இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி ஆகியோர் நடித்து வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக் என்பதை அனைவரும் அறிந்ததே. இருந்தும், இதன் தமிழ் வெர்ஷனில் சில மாறுதல்களைச் செய்து இயக்கி முடித்துள்ளார், இயக்குநர் ஹெச்.வினோத். இதில், வித்யா பாலன், ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் முதல்நாள், முதல் காட்சியைப் பார்த்து வியந்த போனிகபூருக்கு, இந்தப் படம் மீதான நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. இதற்கிடையில், 'ஹெப்டா - தி லாஸ்ட் லெக்சர்' என்ற எகிப்து படத்தின் ரீமேக் உரிமையை போனிகபூர் வாங்கியுள்ளார். அந்தப் படத்தைப் பார்த்து, அஜித் சம்மதித்தால் அதையும் தானே தயாரிக்கத் தயாராக இருக்கிறார் என்ற செய்தியும் வந்தது. இந்நிலையில், " 'நேர்கொண்ட பார்வை' படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன். அஜித்தின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. அவர் விரைவில் இந்தியில் படம் நடிப்பார் என நம்புகிறேன். என்னிடம் மூன்று ஆக்‌ஷன் கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு கதைக்காவது அஜித் ஓகே சொல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று போனிகபூர் பதிவிட்ட ட்வீட், அஜித் ரசிகர்கள் மத்தியில் செம வைரல்!