Published:Updated:

மும்பையில் பூஜையுடன் ஆரம்பமானது ரஜினி - முருகதாஸின் 'தர்பார்'!

தார்மிக் லீ
மும்பையில் பூஜையுடன் ஆரம்பமானது ரஜினி - முருகதாஸின் 'தர்பார்'!
மும்பையில் பூஜையுடன் ஆரம்பமானது ரஜினி - முருகதாஸின் 'தர்பார்'!

ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தயாராக இருக்கும் படம், 'தர்பார்'. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று ஆரம்பமானது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து, 'தர்பார்' படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸோடு கைகோத்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இதற்கு முன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம், 'கஜினி'. தவிர, 27 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் சிவன். 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்று சொல்லப்பட்டுவந்த நிலையில், அது உண்மையல்ல என்று படக்குழு அதை மறுத்துவிட்டது. மேலும், படத்தைப் பற்றி பல செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில், நேற்று 'தர்பார்' என்ற டைட்டிலோடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிட்டிருந்தது. படத்தின் கதை மும்பையில் பயணிப்பதுபோல போஸ்டரிலும் சில குறியீடுகள் இருந்த நிலையில், இன்று காலை, படத்தின் ஷூட்டிங் மும்பையில் இனிதே ஆரம்பம் ஆனது. 

தார்மிக் லீ