Published:Updated:

"டபுள் பார்ட் குழந்தைகள் படம், விஜய்க்கு எழுதியிருக்கிற கதை!" - வெங்கட் பிரபு

"டபுள் பார்ட் குழந்தைகள் படம், விஜய்க்கு எழுதியிருக்கிற கதை!" - வெங்கட் பிரபு
"டபுள் பார்ட் குழந்தைகள் படம், விஜய்க்கு எழுதியிருக்கிற கதை!" - வெங்கட் பிரபு

"டபுள் பார்ட் குழந்தைகள் படம், விஜய்க்கு எழுதியிருக்கிற கதை!" - வெங்கட் பிரபு

தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க, ஆர்.கே.நகர் வெற்றிக்காகக் களமிறங்கியிருக்கிறார், இயக்குநர் வெங்கட்பிரபு. இவர் களமிறக்கியிருக்கும் வேட்பாளர், நடிகர் வைபவ். ஆனால், இது தேர்தலுக்காக அல்ல, சினிமாவுக்காக! இயக்குநர் சரவணராஜன் இயக்கியிருக்கும் `ஆர்.கே நகர்' திரைப்படம் விரைவில் ரிலீஸ். படத்தைத் தயாரித்திருக்கும் வெங்கட் பிரபுவிடம் பேசினேன். 

``படத்துல என்னென்ன எதிர்பார்க்கலாம்?"

``இது உலக சினிமானு எல்லாம் சொல்லமாட்டேன். ரொம்ப ஜாலியான, ஜனரஞ்சகமான படம். மக்களுக்குப் பிடிக்கிற, புரியிற மாதிரி எடுத்திருக்கோம். கூடவே ஒரு சஸ்பென்ஸ் எலமென்ட் படத்துல இருக்கு. மக்களுக்கு ஒரு விழிப்புணர்வையும் படம் கொடுக்கும்."  

``இயக்குநரான நீங்க தயாரிப்பாளர் ஆனதுக்கு என்ன காரணம்?" 

``படம் தயாரிக்கிறது எங்க ஃபேமிலிக்குப் புதுசில்ல. எங்க அப்பா, பெரியப்பா எல்லோரும் பெரிய பெரிய படங்களை, நல்ல படங்களை  தயாரிச்சிருக்காங்க. நானும் இப்போ தயாரிப்பாளர் ஆகியிருக்கேன், அவ்ளோதான்.

இயக்குநர் சுந்தர்.சி சார்தான் நான் தயாரிப்பாளர் ஆனதுக்குக் காரணம். அவர்தான், `உனக்குனு ஒரு பிராண்ட் கிரியேட் பண்ணு. உன் உதவி இயக்குநர்கள், அறிமுக இயக்குநர்களின் படங்களை புரொடியூஸ் பண்ணு'னு சொன்னார். `பிளாக் டிக்கெட்ஸ்' நிறுவனத்தைத் தொடங்குனதுக்குக் காரணம், அதுதான். ஏற்கெனவே `சென்னை 28' படத்தை  எஸ்.பி.சரண்கூட சேர்ந்து பண்ணேன். இந்தப் படத்தை பத்ரி கஸ்தூரி சார்கூட சேர்ந்து தயாரிச்சிருக்கேன். இதுக்குப் பிறகு இன்னொரு படத்தையும் தயாரிக்கலாம்னு இருக்கேன். தயாரிப்பு துறையில பல பிரச்னைகள் இருக்கு. நிறைய விஷயங்களைக் கத்துக்கணும், கவனமா இருக்கணும், விநியோகஸ்தர்களை சந்திக்கணும், அவங்களுக்கு என் படம் பிடிக்கணும்... இதையெல்லாம் என்கூட இருக்கிறவங்க பார்த்துக்கிறாங்க. ஏன்னா, எனக்கு ஸ்கிரிப்ட் எழுதுற வேலைகள் இருக்கு. என்கூட இருக்கிறவங்கதான் என் பாதி சுமையைக் குறைக்கிறாங்க."

`` `ஆர்.கே.நகர்' படத்துக்கு பிரேம் ஜி இசை... அவரைப் பற்றிச் சொல்லுங்க?" 

``யுவன்கூடயே அதிகமா இருந்ததுனால, யுவன் பாதிப்பு பிரேம் ஜி-கிட்ட அதிகமா இருக்கும். அவனை ஒரு இடத்துல பிடிச்சு உட்கார வைக்கிறதுதான் ரொம்பக் கஷ்டம். இந்தப் படத்துல வர்ற `பப்பர மிட்டாய்' பாட்டுக்கு சூப்பரா மியூசிக் கம்போஸ் பண்ணியிருக்கான். படத்தோட களம் வடசென்னை. அதுக்கேத்த மாதிரி இருக்கும் அவன் இசை. அதேமாதிரி `பார்ட்டி' படத்தோட கதை ரொம்ப ஹைடெக்கா இருக்கும். அந்தப் படத்துக்கும் அதோட தன்மையைப் பொறுத்து மியூசிக் கொடுத்திருக்கான். பின்னணி இசைதான் அவனோட பெரிய பலம். வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்.. இப்படிப் பலபேர்கிட்ட வொர்க் பண்ணவன். அவனுக்கு இசை அறிவு அதிகம். கண்டிப்பா இந்த ரெண்டு படங்களுக்கும் ஒரு இசையமைப்பாளரா நல்ல அடையாளத்தை தரும். தவிர, அவன் நடிகனா இருக்கிறதைவிட இசையமைப்பாளரா இருக்கணும்னுதான் யுவன், எனக்கு, என் குடும்பத்துல இருக்கிற எல்லோருக்கும் ஆசை."

``விஜய், ரஜினிகூட எப்போ படம் பண்ணப்போறீங்க?"

``விஜய்க்கு ஒரு கதை எழுதிக்கிட்டு இருக்கேன். முடிச்சதும் கண்டிப்பா அவர்கிட்ட சொல்லணும். `மங்காத்தா' படத்துல அஜித்தை எப்படி வித்தியாசமா காட்டியிருந்தேனோ, அதேமாதிரி விஜய்யையும் வித்தியாசப்படுத்தி காட்டுவேன். ரஜினி சார்கூட படம் பண்ணனும்ங்கிறது என் கனவு. சமயத்துல ரஞ்சித்தைப் பார்க்கிறப்போ பொறாமையா இருக்கும். ஏன்னா, தொடர்ந்து இரண்டு படங்கள் ரஜினியை வெச்சுப் பண்ணிட்டார். அது எனக்குப் பெருமையாவும் இருக்கு. ரஜினி சார் முழுநேர அரசியல்வாதியா களமிறங்குறதுக்குள்ள அவர்கூட ஒரு படம் பண்ணிடணும். எது எது எப்ப எப்போ நடக்கணுமோ, அது அது அப்பப்போ நடக்கும்."

``உங்க கனவுப் படம் என்ன?" 

``குழந்தைகளுக்காக ஒரு படம் பண்ணணும்னு பிளான் வெச்சிருக்கேன். அதுதான் என் ட்ரீம் ப்ராஜெக்ட். பட்ஜெட் அதிகமாகும். ஆனா, இங்கிலீஷ்ல பண்ணா ஈஸியா பண்ணிடலாம். ஏன்னா, ஹாலிவுட்ல கன்டென்ட்தான் ஹீரோ. `அவதார்', `நான் ஈ' அப்படி குழந்தைகளுக்கான கன்டென்ட் உள்ள படங்கள். அப்படி ஒரு படம் பண்ணணும்னு ஆசைப்படுறேன். ரெண்டு பார்ட் கொண்ட இந்தக் கதையை ஏதாவது ஒரு பெரிய நிறுவனம் பண்ணா நல்லா இருக்கும். கதை எழுதிட்டேன், படத்துக்குப் பெயரும் வெச்சுட்டேன். ஆனா, எதையும் இப்போ சொல்ல முடியாது." 

அடுத்த கட்டுரைக்கு