Published:Updated:

"மும்பை கதை, போலீஸ் கெட்டப்லாம் விடுங்க... 'பப்ஜி' போஸ்டர் கவனிச்சீங்களா?!" - 'தர்பார்' குறியீடுகள்

தார்மிக் லீ

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தின் போஸ்டர் குறியீடுகள்.

"மும்பை கதை, போலீஸ் கெட்டப்லாம் விடுங்க... 'பப்ஜி' போஸ்டர் கவனிச்சீங்களா?!" - 'தர்பார்' குறியீடுகள்
"மும்பை கதை, போலீஸ் கெட்டப்லாம் விடுங்க... 'பப்ஜி' போஸ்டர் கவனிச்சீங்களா?!" - 'தர்பார்' குறியீடுகள்

.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று ரிலீஸானதைத் தொடர்ந்து, செம வைரல் ஆனது! அந்தப் போஸ்டரில் இருக்கும் சுவாரஸ்யங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.  

"மும்பை கதை, போலீஸ் கெட்டப்லாம் விடுங்க... 'பப்ஜி' போஸ்டர் கவனிச்சீங்களா?!" - 'தர்பார்' குறியீடுகள்

ரஜினி - முருகதாஸ் கூட்டணி அமைத்திருக்கும் இப்படத்திற்கு, 'நாற்காலி' என்ற டைட்டில்தான் வைக்கப்போகிறார்கள் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. அரசியல் சார்ந்த பல விஷயங்களைப் படம் பேசப்போவதால், இந்த டைட்டில்தான் என்று ரசிகர்களே ஃபிக்ஸ் ஆகிக்கொண்டனர். பின் அதிகாரப்பூர்வமாக டைட்டில் 'நாற்காலி' இல்லை என்ற செய்தி வெளியானது. தொடர்ந்து படத்தின் டைட்டில் 'தர்பார்' என்றும், ரஜினியின் லுக்கும் போஸ்டரில் வெளியானது. அரசவை கூடும் இடத்தைத்தான் தர்பார் என்று சொல்வார்கள். அதனால், இந்தப் படம் கண்டிப்பாக அரசியல் பேசும்.

போஸ்டரில் ரஜினிகாந்த் அவருக்கே உரிய பிரத்யேக சிரிப்பில் போஸ் கொடுக்கிறார். படத்தில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதும், கதை அதைச் சுற்றியே இருக்கும் என்பதும் போஸ்டரில் இருக்கும் காவல் துறை சார்ந்த விஷயங்களைப் பார்க்கும்போது தெரிகிறது. போலீஸ் பெல்ட், ஐ.பி.எஸ் டேக், ரஜினி தலைக்குப் பின்னால் இருக்கும் இரண்டு துப்பாக்கிகள், தொப்பி, போலீஸ் நாய், கை விளங்கு, எச்சரிக்கைக் குறி... போன்ற பல விஷயங்கள் ரஜினி இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதை உணர்த்துகிறது. தவிர, போஸ்டரில் இருக்கும் 'மும்பை கேட்வே ஆஃப் இந்தியா' படத்தின் களம் மும்பை என்பதை உணர்த்துகிறது. தவிர, ரஜினிக்கு அருகே மும்பை நகரின் மேப் இடம்பெற்றிருக்கிறது. இவை தவிர, போஸ்டரைத் தலைகீழாகப் பார்த்தால் 'தர்பார்' என்ற டைட்டிலுக்கு அருகே மும்பை என்று எழுதப்பட்டிருக்கிறது. அதனால், படத்தின் கதைக்கும் மும்பைக்கும் மிக முக்கியத் தொடர்பு இருக்கிறது.  

எல்லாம் சரி... படத்தில் ரஜினி கதாபாத்திரம் என்னவாக இருக்கும்?! அதையும் போஸ்டரில் இருக்கும் நான்கு வரிகள் உணர்த்துகின்றன. மும்பை மேப்புக்கு அருகில், 'You decide you want me to be good, bad or worse' என்று குறிப்பிட்டிருக்கிறது. 'நான் நல்லவனா, கெட்டவனா, கேடுகெட்டவனா என்பதை நீயே முடிவு செய்துகொள்' என்பதுதான் அதன் அர்த்தம். 'மூன்று முகம்' படத்தில் அலெக்ஸ் பாண்டியனாக நடித்த ரஜினி ஸ்ட்ரிக்ட்டான போலீஸ் ஆபீஸர். 'தர்பார்' படத்தில் அப்படியே அதற்கு நேரெதிராக இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ரஜினியின் தலைக்கு மேல் இருக்கும் இரண்டு புல்லட்கள் அவருக்குக் கொம்பு வைத்ததுபோல் தெரியும். இவருடைய வில்லத்தனத்தைக் காட்டுவதற்கான குறியீடாக இருக்குமோ?!

"மும்பை கதை, போலீஸ் கெட்டப்லாம் விடுங்க... 'பப்ஜி' போஸ்டர் கவனிச்சீங்களா?!" - 'தர்பார்' குறியீடுகள்

இவை எல்லாவற்றையும்விட, பப்ஜி ரசிகர்களுக்காக ஒரு ஸ்பெஷல் செய்தி இருக்கிறது. 'தர்பார்' போஸ்டரில் ரஜினிகாந்துக்குப் பின்னால் இருக்கும் அந்த இரண்டு துப்பாகிகளும் 'M416' ரகத்தைச் சேர்ந்தவை. சமீபத்தில் மொபைல் கேமாக வெளியான 'பப்ஜி' செம ஹிட்! அதில் வரும் துப்பாகிகளும், அதன் பெயர்களும் ஒரிஜினல் துப்பாக்கியின் பெயர்கள்தான். சில பப்ஜி வெறியர்கள் புல்லட் சத்தத்தை வைத்தே அது எந்த ரக துப்பாக்கி என்று சொல்லிவிடுவார்கள். அவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், போஸ்டரில் இடம்பெற்றிருப்பது 'M416' துப்பாக்கி ரகத்தைச் சேர்ந்தது என்று.  

ஆக, ரஜினிகாந்த் அவரது ஸ்டைலில் நீண்ட நாள்களுக்குப் பிறகு போலீஸாக நடித்து அதகளம் செய்யவிருக்கிறார். பொங்கலுக்குப் பொருத்திருந்து பார்ப்போம்!