Published:Updated:

``ரெண்டு தம்பிகளையும் படத்தைப் பார்க்க வைக்கிறதுக்குள்ள..." - கெளதம் கார்த்திக்

``ரெண்டு தம்பிகளையும் படத்தைப் பார்க்க வைக்கிறதுக்குள்ள..." - கெளதம் கார்த்திக்
``ரெண்டு தம்பிகளையும் படத்தைப் பார்க்க வைக்கிறதுக்குள்ள..." - கெளதம் கார்த்திக்

``ரெண்டு தம்பிகளையும் படத்தைப் பார்க்க வைக்கிறதுக்குள்ள..." - கெளதம் கார்த்திக்

``இந்த ஜீனியஸ்லாம் இருப்பாங்கள்ல... அந்த மாதிரி, மணி சார் ரொம்ப சைலன்ட் டைப். எனக்குத் தெரியாத விஷயங்களை அவர்கிட்டதான் கேட்டுத் தெரிஞ்சுப்பேன். அவர் பிஸியா இருந்தாலும், அப்பப்போ டைம் கேட்டு அவரைப் பார்ப்பதுண்டு. `கடல்' ஷூட்டிங் டைம்ல சிச்சுவேஷனைச் சொல்லிட்டு, சீன் எப்படி இருக்கணும்னு சொல்லிக்கொடுப்பார். ஈஸியா புரியவைப்பார். சொல்லப்போனா, நடிச்சும் காட்டுவார். நாம அதைச் சரியா பண்றவரைக்கும் சொல்லிக்கொடுக்கிறதுல, மணி சார் கிங்!" - சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் மணிரத்னம் குறித்து இப்படிச் சொல்கிறார் கெளதம் கார்த்திக். 

``ஊட்டி கான்வென்ட்ல படிச்சப்போ, ஒரு நடிகரின் வாரிசா உங்களுக்கு என்னென்ன அனுபவங்கள் இருந்தன?"

``ஸ்கூல்ல இருந்த தோட்டக்காரங்களுக்கு, கிச்சன்ல வேலை பார்த்த ஆள்களுக்கு மட்டும்தான் தெரியும். மத்தபடி, கான்வென்ட்ல நான் கார்த்திக் பையன்னு தெரியவே தெரியாது. தவிர, அங்கே நிறைய ஃபாரின் பசங்க படிச்சதுனால, அதையெல்லாம் பெருசா எடுத்துக்கமாட்டாங்க. சுருக்கமா சொன்னா, ஸ்கூல் டைம்ல நான் ஒரு `ஸ்டார் கிட்'டா வளரலை. ஊட்டியில ரொம்ப ஜாலியா சுத்திக்கிட்டிருந்தேன். அங்கே நான் பண்ணாத ரகளையே இல்லை. அங்கிருக்கிற நிறைய லோக்கல் பசங்களை எனக்குத் தெரியும். அவங்ககூட ஆட்டோ ஓட்டுன அனுபவமும் இருக்கு. எனக்குப் பத்து வயசு ஆனவரைக்கும் சென்னையில ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தேன். அதுக்கப்புறம் சாதாரண வாழ்க்கைதான். இப்போவும் எனக்கு ஏதாவது குழப்பமான மனநிலை இருந்தா, ஊட்டிக்குக் கிளம்பிடுவேன். அப்போதான் ரிலாக்ஸா இருக்கும். ஒருவேளை அம்மாவோட சொந்த ஊர் ஊட்டிங்கிறதுனால, எனக்கு ஒரு எமோஷனல் கனெக்ட் இருக்குனு நினைக்கிறேன்."

``ஊட்டி - கௌதம் கார்த்திக் வாழ்க்கை... ரெண்டுல எது ரொம்ப மாறியிருக்கு?"

``ஊட்டிதான் ரொம்ப மாறியிருக்கு. ரொம்ப கமர்ஷியல் ஆகிடுச்சு, சூடாகவும் ஆகிடுச்சு. ஊட்டியில நான் வளர்ந்ததெல்லாம் முத்தொரை பாலடாங்கிற ஊர்லதான். ஊட்டியில இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கிற அந்த இடம், ரொம்ப அமைதியா ரம்மியமா இருக்கும்."  

``ஷுட்டிங் ஸ்பாட்ல கௌதம் கார்த்திக் ரொம்ப சேட்டைனு கேள்விப்பட்டிருக்கோம். வீட்டுல எப்படி?"

``வீட்டுல நான் இருந்த நாள்கள் ரொம்பக் கம்மிதான். ஸ்கூல்ல எல்லோரையும் வம்பு இழுத்துக்கிட்டு, ஜாலியா இருப்பேன். அங்கே நான் பண்ற பெரும்பாலான சேட்டைகளுக்குத் துணை, அங்கிருக்கிற தோட்டக்காரங்களும், கிச்சன் ஆள்களும்தான்! ஸ்கூல்ல கெஸ்ட் யாருக்காச்சும் சமைச்சா, அதை நைசா கேட்டு வாங்கி மத்தவங்களைக் கடுப்பாக்கிட்டு சாப்பிடுவேன். இப்படி என் சேட்டையெல்லாம் சின்னச் சின்னதா எல்லோரையும் சிரிக்கவைக்கிற மாதிரிதான் இருக்கும். என் நோக்கமும் அதுதான். இதுவரை நான் பண்ண சேட்டை யாரையும் காயப்படுத்துனதில்லை. ஆனா, வெகுளியா மூஞ்சியை வெச்சுக்கிட்டு எல்லா சேட்டையும் பண்ணுவேன்."  

``இந்தக் கேரக்டர் சினிமாவுக்கு எந்தளவுக்குப் பயன்படுது?"

``ஆரம்பத்துல ரொம்ப இலகுவா, ஃப்ரீ மைண்ட்லதான் இருந்தேன். சினிமா பற்றிப் பெருசா எதுவும் தெரியாது. யார், எப்படி, என்ன பண்றாங்கனு எதுவும் தெரியாது. யாராவது வந்து நல்லா பேசுனா, கதை சொன்னா டக்குனு ஓகே சொல்லிட்டு, அந்தப் படத்துல நடிச்சிடுவேன். அதனால, ஒருசில தப்பான முடிவுகளும் எடுக்கவேண்டியதா போச்சு. கொஞ்சம் கால்குலேட் மைண்ட் வந்த பிறகுதான், ஒரே மாதிரி படங்களைப் பண்ணக் கூடாதுனு புரிஞ்சுக்கிட்டேன். குறைந்தபட்சம் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் வித்தியாசமாவது இருக்கணும்னு நினைச்சேன். 

தவிர, ஒரு படத்தோட வெற்றி, தோல்வி ஆடியன்ஸ் கையிலதான் இருக்கு. அவங்களுக்கு எது பிடிக்கும், பிடிக்காதுனு நம்மளால கணிக்க முடியாது. திடீர்னு ஒரு படத்தைக் கொண்டாடுவாங்க, சில நல்ல படங்களை சீண்டக்கூட மாட்டாங்க, மொக்கைனு சொல்லிடுவாங்க. அதை நாம புரிஞ்சுக்கிறதுக்குள்ள வயசாகி, இண்டஸ்ட்ரியை விட்டே போயிடுவோம்." 

``அம்மா, அப்பா, நீங்க சினிமாவுல இருக்கீங்க. தம்பிங்க ரெண்டுபேரும் என்ன பண்றாங்க?"

``அவங்க வெவ்வேற ஐடியாவுல இருக்காங்க. மூத்த தம்பியை நடிக்கக் கேட்டாங்க. அவர் ஜெனிடிக் இன்ஜினீயரிங், சயின்ஸ்னு போய்க்கிட்டுருக்கார். அடுத்த தம்பி மியூசிக்ல ஆர்வமா இருக்கார். நான் ஊட்டியில படிச்சேன். அவங்கெல்லாம் இன்டர்நேஷனல் வெவல்தான்! முக்கியமா அவங்க தமிழ்ப் படமே பார்க்கிறதில்லை. நான் நடிச்ச படங்களையே பார்க்கச் சொல்லி ரொம்பக் கெஞ்சணும். கொஞ்சம் ஓவராதான் பண்றாங்க. ஒருவேளை சினிமா ஆர்வம் வந்தா, தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி, நடிக்க வெச்சிட வேண்டியதுதான்." 

``அம்மாவைப் பத்திச் சொல்லுங்க?"

``அம்மா எனக்கு சப்போர்ட் மட்டுமல்ல, என் பலமே அவங்கதான். சில விஷயங்கள் எனக்கு வரலையேனு ஃபீல் பண்ணும்போதெல்லாம்  அவங்க பேச்சுதான் எனக்கு எனர்ஜி. அவங்க நம்பிக்கையா பேசுனாலே, எந்த வேலையா இருந்தாலும் ஈஸியா முடிச்சிடுவேன்."  

``தமிழ் சினிமாவுல சாக்லேட் பாய்ஸ் கம்மியாகிட்டே வர்றாங்க. நீங்களும் இப்போ ஆக்‌ஷன்ல இறங்கிட்டீங்களே?!" 

``ரொமான்ஸ் ஹீரோக்களுக்கெல்லாம் இங்கே பற்றாக்குறை இல்லைங்க. காதல் கதைகளே இங்கே கம்மியாதான் இருக்கு. நான் ரொமான்ஸ் படங்களைத்தான் எதிர்பார்க்குறேன். தமிழ் சினிமாவுல அப்படி ஒரு ஜானரே போயிடும்போல! ப்யூர் ரொமான்ஸ் படங்களையே காணோம்."

அடுத்த கட்டுரைக்கு