Published:Updated:

தாயாகப் போகும் நிஷா.. புகைப்படத்தை வெளியிட்டு சந்தோஷத்தைப் பகிர்ந்த கணேஷ்!

வெ.வித்யா காயத்ரி
தாயாகப் போகும் நிஷா.. புகைப்படத்தை வெளியிட்டு சந்தோஷத்தைப் பகிர்ந்த கணேஷ்!
தாயாகப் போகும் நிஷா.. புகைப்படத்தை வெளியிட்டு சந்தோஷத்தைப் பகிர்ந்த கணேஷ்!

`பிக்பாஸ்' மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இவருடைய காதல் மனைவி நிஷா. இந்த நட்சத்திர தம்பதி தங்களுடைய வாழ்வின் பொக்கிஷ தருணங்களை எதிர்கொள்ள இருக்கிறார்கள். நிஷா - கணேஷ் இருவருக்கும் அவர்களுடைய குடும்பத்தினர் முன்னிலையில் சீமந்தம் நடைபெற்றிருக்கின்றது. இந்த நிகழ்வை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணேஷ் வெங்கட்ராமன் பதிவிட்டிருந்தார். 

மேலும், 'எங்களுடைய குடும்பத்தில் புதிய வரவு ஒன்று வர இருக்கின்றது. தந்தையாக என் வாழ்வின் அடுத்தகட்டத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். நான் பொறுப்பாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது!' எனப் பதிவிட்டிருந்தார்.

வாழ்த்துகள் கணேஷ் - நிஷா!