Published:Updated:

``நடிகை கஸ்தூரிக்கு நன்றிகள்!" - சர்ச்சையான ட்வீட்டுக்கு நடிகை லதா பதிலடி!

``நடிகை கஸ்தூரிக்கு நன்றிகள்!" - சர்ச்சையான ட்வீட்டுக்கு நடிகை லதா பதிலடி!
``நடிகை கஸ்தூரிக்கு நன்றிகள்!" - சர்ச்சையான ட்வீட்டுக்கு நடிகை லதா பதிலடி!

``நடிகை கஸ்தூரிக்கு நன்றிகள்!" - சர்ச்சையான ட்வீட்டுக்கு நடிகை லதா பதிலடி!

மீபத்தில் நடிகை கஸ்தூரி ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடிய ஆட்டத்தைப் பற்றி நடிகர்கள் எம்.ஜி.ஆர், லதாவை வைத்து பதிவு செய்திருந்த சர்ச்சை ட்வீட் குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று அந்தப் பதிவுக்காக பகிரங்க மன்னிப்பு ஒன்றையும் கேட்டிருந்தார். தவிர, லதாவுக்கும் போன் செய்து மன்னிப்பு கேட்டிருக்கிறார் கஸ்தூரி. இது குறித்து லதாவிடம் பேசினேன். 

``நடிகை கஸ்தூரிக்கு நன்றிகள்!" - சர்ச்சையான ட்வீட்டுக்கு நடிகை லதா பதிலடி!

``இப்போதைய நடிகைகள் நடிப்பதைவிடவும் நாங்கள் அப்போது ஒன்றும் மோசமாக நடித்துவிடவில்லை. நான் உண்டு என் வேலை உண்டு என்று எதிலும் தலையிடாமல் இருக்கிறேன். இவர் ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறார் என்று தெரியவில்லை. புரட்சி, பெண்ணியம் எனப் பேசித் திரிபவர் செய்கிற காரியமா இது. இவருக்கெல்லாம் சீனியர் நான். இருந்தும் என்னை வம்பிழுத்திருக்கிறார். இப்போது இருக்கும் ஹீரோயின்களைப் பற்றிப் பேச வேண்டியதுதானே?! அப்படிப் பேசினால் பிரச்னை வரும் என்பதற்காகத்தானே அமைதியாக இருக்கிறார். சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான நயன்தாரா, ராதாரவி பிரச்னையைப் பற்றி ஏன் இவர் பேசவில்லை.'' என்று கொந்தளித்தவரிடம், கஸ்தூரி தொடர்பு கொண்டு பேசியதைக் கேட்டோம்.  

``நடிகை கஸ்தூரிக்கு நன்றிகள்!" - சர்ச்சையான ட்வீட்டுக்கு நடிகை லதா பதிலடி!

``அவர் ட்வீட் செய்த பிறகு காலை 11 மணியிலிருந்தே எம்.ஜி.ஆர்.மன்றம், அ.தி.மு.க கட்சி எனப் பல இடங்களிலிருந்து ஏகப்பட்ட போன் கால்ஸ். இப்போவரைக்கும் இதைப் பற்றி விசாரிச்சுக்கிட்டு இருக்காங்க. அதற்குப் பிறகு கஸ்தூரி நேற்று மாலை நேரத்தில் என்னை போனில் அழைத்தார். ``நான் சொன்னதில் எந்தத் தவறும் தெரியவில்லை. அப்படி உங்கள் மனசு புண்பட்டிருந்தால், மன்னிப்பு கேட்டுக்கிறேன்." என்றார். அதற்கு நான், ``கருத்துச் சொல்ல எல்லோருக்குமே உரிமை இருக்கு. ஆனால், நீங்க சொல்றதுக்கும், எங்க படத்துக்கும் என்ன சம்பந்தம்?! நீயே படிச்சுப் பாரு, உனக்கே புரியும். கருத்தைக் கொஞ்சம் டீசன்ட்டா சொல்லியிருந்தாகூட பரவாயில்ல. பெண்ணியம் பேசுற நீ இப்படிப் பண்ணக்கூடாது.'' என்று பதில் சொன்னேன். அதற்கு வருத்தப்பட்டார். `சினிமா இண்டஸ்ட்ரியில இருக்கிற நீயே இப்படிப் பேசுனா எப்படி?' என்பதுதான் என் கேள்வி. நான் ஏதாவது சொல்லியிருந்து இந்த மாதிரி பதில் சொல்லியிருந்தா பரவாயில்லை. இனிமேலாவது அவங்க இந்த மாதிரி பண்ணாம  இருப்பது நல்லது. ஆனால், ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கிறேன். எம்.ஜி.ஆர் புகழ் எப்போதுமே அழியாது. அதை எல்லோரும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.'' என்றவர்,

``நடிகை கஸ்தூரிக்கு நன்றிகள்!" - சர்ச்சையான ட்வீட்டுக்கு நடிகை லதா பதிலடி!

``கஸ்தூரி ட்வீட் பண்ணதுனால என்மீது மக்கள் எவ்வளவு மரியாதை வெச்சிருக்காங்கனு புரிஞ்சுக்கிட்டேன். அதுக்காக கஸ்தூரிக்கு நன்றி சொல்லிக்கிறேன். `எம்.ஜி.ஆர் லதா'ன்னுதான் இப்போவும் என்னை அழைக்கிறாங்க. இந்தப் பிரச்னையில் எனக்கு சப்போர்ட் பண்ண எல்லோருக்கும் என் நன்றிகள். சன் டிவி `சந்திரகுமாரி', விஜய் டிவி `சிவா மனசுல சக்தி' சீரியல்களில் பிஸியா இருக்கேன். என் உறவினர்களெல்லாம் வெளிநாடுல இருக்காங்க. அங்கே, இங்கே என நான் பிஸியாக டிராவல் பண்ணிட்டு இருக்கேன். தவிர, இப்போவும் அ.தி.மு.க-வில்தான் இருக்கேன். வேலை பளு அதிகமாக இருக்கிறதுனால, பிரசாரம் பண்ண முடியல. கருத்துக் கணிப்பின்படி அ.தி.மு.க ஜெயிக்கும்னு சொல்றாங்க. கடைசி நேரத்தில் மக்கள் மனதில் என்ன நினைக்கிறாங்களோ, அப்படித்தான் தேர்தல் முடிவுகள் இருக்கும். நாங்க கண்டிப்பா ஜெயிப்போம்." என்று கட்டைவிரல் உயர்த்துகிறார், லதா. 

இது குறித்து கஸ்தூரியிடம் கேட்க நீண்ட நேரம் முயற்சி செய்து பேசினோம், ``நான் அவங்ககிட்ட போன் பண்ணி மன்னிப்புக் கேட்டது உண்மைதான். இதுல என்ன மேடம் தப்புனு முதலில் கேட்டேன். பாடல் காட்சி நடிக்கும்போது, உணர்ச்சியைத் தூண்டுவது போல நடிக்கும்போதும்  அர்ப்பணிப்போடுதானே நடிச்சிருப்பாங்க. அவங்களைப் பார்த்துதானே நாங்களும் கத்துக்கிறோம்.`இதை ஏன் விரசமாகப் பார்க்கிறீங்க?'னு கேட்டேன். அதற்கு, ``நான் அப்படி பார்க்கல. மக்கள் அப்படிப் பார்க்கிறாங்க'னு சொன்னாங்க. மக்களின் கண்ணோட்டத்தை புரிஞ்சுக்கச் சொல்லியும் அட்வைஸ் பண்ணாங்க'' என்றார் கஸ்தூரி.

அடுத்த கட்டுரைக்கு