Published:Updated:

``இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர்

வே.கிருஷ்ணவேணி
``இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர்
``இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர்


மோஸ்ட் வாண்டட் டான்ஸ் கோரியோகிராஃபர்களில் ஒருவர் பிருந்தா. நயன்தாரா, த்ரிஷா, குஷ்பூ, ஜோதிகா என பல முன்னணி நடிகைகளுக்கு டான்ஸ் கற்றுத் தருபவர் பிருந்தா. தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு படம் செம்ம வைரலாகியிருக்கிறது. இது குறித்து அவரிடம் கேட்டேன்.

``நேற்று ஜோதான் இந்த போட்டோவை எனக்கு அனுப்பி இருந்தா. இன்னைக்கு நான், ரேவதி, ஜோதிகா மூன்று பேரும் டான்ஸ் பிராக்டிஸில் இருந்தோம். அப்போது ஜோதான் ` பிருந்தா நாம மூன்று பேரும் அதே போஸ்ல போட்டோ எடுப்போமா'னு ஐடியா கொடுத்தா. ஓ.கே'னு சொல்லி போட்டோ எடுத்தோம். அதைத்தான் என் ட்விட்டர் பேஜில் போட்டேன். எதிர்பார்க்கவே இல்லாத அளவுக்கு பல பேர் லைக் பண்ணி, ஷேர் பண்ணியிருக்காங்க'' என்றவரிடம் ``ஜோ, ரேவதி இரண்டு பேரும் இந்த போட்டோவுக்கு என்ன சொன்னாங்க'' என கேட்டதற்கு, 

``எங்க மூன்று பேருக்குமே சந்தோஷம் தாங்கல. ஜோதான் `இன்னும் அப்படியே இருக்கோம்'ல என்று அதே சிரிப்போடு என்னைக் கேட்டா. ரேவதி ஆரம்பத்திலேயே வெட்கம் தாங்காமல் சிரிச்சிட்டே இருந்தாங்க. `நம்ம  இந்த போட்டோ எடுத்து 20 வருஷம் இருக்கும் பிருந்தா'னு ஜோ சொல்லிதான் எனக்கே ஞாபகம் வந்தது. அப்போ குஷ்பூ, ஜோதிகா இரண்டு பேருக்கும் ஒரு ஸ்டேஜ் ஷோவுக்காக டான்ஸ் சொல்லிக் கொடுத்தேன். யதேச்சையாக அதைப் போட்டோ எடுத்திருந்தாங்க. இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ.'' என்றவரிடம் ஜோவிடம் இப்போது வேலை வாங்குவது எப்படி இருக்கு?' என்றால்,

``முன்பைவிட எனர்ஜி இப்போ அதிகமாக இருக்கு. எந்த ஸ்டெப், எக்ஸ்பிரஷன் சொன்னாலும் `சட்டு சட்டு'னு பிடிச்சிருக்கிறா. ஜோ டெடிகேஷனானவ தெரியும். ஆனால், இப்படி ஒரு டெடிகேஷனை இத்தனை வருஷத்துக்குப் பிறகு நான் எதிர்பார்க்கவே இல்லை. தன்னுடைய உடம்பை அப்படியே வச்சிருக்கா. எப்படி கம்பு சுத்துறா. சான்சே இல்லை. மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான ஆள் ஜோ' என சிலாகித்தார் மாஸ்டர் பிருந்தா. படத்தின் பெயர் இன்னும் வெளியாகவில்லையாம். கூடிய விரைவில் ஜோவை வித்தியாசமான ஒரு கதையில் பார்க்கலாம் என்றார்.