Published:Updated:

``குச்சுப்புடி கோர்ஸ் படிக்கிறேன்; சோஷியாலஜியில டிகிரி பண்றேன்!" - லட்சுமி மேனன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``குச்சுப்புடி கோர்ஸ் படிக்கிறேன்; சோஷியாலஜியில டிகிரி பண்றேன்!" - லட்சுமி மேனன்
``குச்சுப்புடி கோர்ஸ் படிக்கிறேன்; சோஷியாலஜியில டிகிரி பண்றேன்!" - லட்சுமி மேனன்

``ஒருமுறை என்னைப் பற்றிய ஒரு பொய்யான வீடியோ பரவியது. அது ஃபேக்னு எல்லோருக்கும் தெரிஞ்சு, எனக்கு சப்போர்ட்டா எல்லோரும் பேசினாலும், அந்தப் பிரச்னையில இருந்து மீண்டு வர எனக்கு சில வாரங்கள் தேவைப்பட்டது."

பிரபுதேவா, லட்சுமி மேனன் நடித்திருக்கும் `யங் மங் சங்' படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் `யமுனா' என்ற கேரக்டரில் கிராமத்துப் பெண்ணாக வருகிறார், லட்சுமி மேனன். `இதுவரை நடிக்காத கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடிச்சது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர் எம்.எஸ்.அர்ஜூனுக்கு இது முதல் படம். கேரளாவுக்கு வந்து கதை சொன்னார். பிடிச்சிருந்துச்சு, உடனே ஓகே சொல்லிட்டேன்' எனச் சொல்பவர், கடைசியாகக் கமிட் ஆன படம் இதுதான். இந்தப் படத்திற்குப் பிறகு பிரேக் எடுத்திருந்த அவரைத் தொடர்புகொண்டு பேசினேன். 

``குச்சுப்புடி கோர்ஸ் படிக்கிறேன்; சோஷியாலஜியில டிகிரி பண்றேன்!" - லட்சுமி மேனன்

``டான்ஸ் எனக்கு உயிர்னுகூடச் சொல்லலாம். ஏன்னா, மூணு வயசுல இருந்து நான் டான்ஸ் கத்துக்கிட்டு இருக்கேன். கிடைச்சிருக்கிற இந்த பிரேக்ல குச்சுப்புடி டான்ஸுக்கு டிப்ளோமா படிச்சுக்கிட்டு இருக்கேன். கூடவே, சோஷியாலஜி டிகிரியைப் பிரைவேட்டா படிச்சுக்கிட்டிருக்கேன். ஏற்கெனவே பரத நாட்டியத்துக்கு கோர்ஸ் படிச்சேன். குச்சுப்புடி டான்ஸ்ல எனக்கு ரெண்டாவது கோர்ஸ்! என்பவரிடம் 'யங் மங் சங்' அனுபவங்களைக் கேட்டேன்.  

``குச்சுப்புடி கோர்ஸ் படிக்கிறேன்; சோஷியாலஜியில டிகிரி பண்றேன்!" - லட்சுமி மேனன்

``இந்தப் படத்திற்கான வேலைகள் ஆரம்பிச்சு மூன்று வருடம் ஆகுது. என் போர்ஷனை எப்போவோ முடிச்சுக் கொடுத்துட்டேன். அதுக்குப் பிறகுதான் பிரேக் எடுத்துக்கிட்டேன். பிரபுதேவா சார்கூட சேர்ந்து நடிச்சது எனக்குப் புது அனுபவமா இருந்தது. அவரின் டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் குரு எனக்கு என்ன கத்துக்கொடுப்பாரோ, அதை பிரபுதேவா சார்கிட்ட பார்த்திருக்கேன். இந்தப் படத்துல ஒரு சூப்பர் டான்ஸ் அவருக்கு இருக்கு. புரொபெஷனல் டான்ஸராச்சே... அதனால, டான்ஸ் சார்ந்த பல டிப்ஸ் அவர்கிட்ட இருந்து கேட்டுக்கிட்டேன். `யங் மங் சங்' படம் முடிஞ்சு ரொம்பநாள் ஆச்சு. அதனால, சீக்கிரமே ரிலீஸாகும்னு நினைக்கிறேன். அடுத்து, ரெண்டு தமிழ்ப் படத்துல நடிக்க ஸ்கிரிப்ட் கேட்டு வெச்சிருக்கேன். முடிவானதும் சீக்கிரமா சொல்றேன்." என்றவர், தொடர்ந்தார்.

``குச்சுப்புடி கோர்ஸ் படிக்கிறேன்; சோஷியாலஜியில டிகிரி பண்றேன்!" - லட்சுமி மேனன்

``நான் எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் ஹாப்பியாதான் இருப்பேன். எனக்குக் கிடைச்சிருக்கிற இந்த இடைவெளியை சந்தோஷமா கழிக்கிறேன். எப்போ மறுபடியும் படத்துல நடிப்பீங்கனு பலரும் கேட்கிறாங்க. அவங்களுக்கெல்லாம் சீக்கிரமே குட் நியூஸ் வரும். மத்தபடி, எனக்குக் கனவுகள்னு எதுவும் கிடையாது. வாழ்க்கை என்ன கொடுக்குதோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்கிற மனநிலை எனக்கு இருக்கு. ஏற்ற இறக்கங்கள் கொண்டதுதானே வாழ்க்கை... அது எனக்குப் புரியும். தவிர, நான் எப்போவும் யாருடைய பிரச்னைகளிலும் தலையிட மாட்டேன். அதைப் பற்றி யோசிக்கவும் மாட்டேன். ஒருமுறை என்னைப் பற்றிய ஒரு பொய்யான வீடியோ பரவியது. அது ஃபேக்னு எல்லோருக்கும் தெரிஞ்சு, எனக்கு சப்போர்ட்டா எல்லோரும் பேசினாலும், அந்தப் பிரச்னையில இருந்து மீண்டு வர எனக்கு சில வாரங்கள் தேவைப்பட்டது. அந்தச் சமயத்துல என்னால நார்மலா இருக்க முடியல.  

``குச்சுப்புடி கோர்ஸ் படிக்கிறேன்; சோஷியாலஜியில டிகிரி பண்றேன்!" - லட்சுமி மேனன்

மனசளவுல ரொம்ப அவதிப்பட்டேன். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துட்டேன். இப்போது, நான் என் வேலைகளில் கவனமா இருக்கேன். அவரை மாதிரி இருக்கணும், இவரை மாதிரி இருக்கணும்னு நினைக்கும்போதுதான் பிரச்னை வரும். இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதனால, பிரேக், பிரச்னைகள்... எதையும் நான் பெருசா எடுத்துக்கமாட்டேன். எப்போவும் சந்தோஷமா இருக்கணும், நம்மளைச் சுத்தி இருக்கிறவங்களையும் சந்தோஷமா வெச்சுக்கணும்... அவ்ளோதான்!" என்கிறார், லட்சுமி மேனன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு