
'கொம்பன்', 'குட்டிப்புலி' போன்ற படங்களைத் தொடர்ந்து முத்தையா இயக்கி இருக்கும் திரைப்படம் 'தேவராட்டம்'. இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி பரவலாகப் பேசப்பட்டது. இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தில் 'மதுரை பளபளக்குது' என்கிற பாடலை விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளர் பிரியங்கா பாடியிருக்கிறார்.
இது குறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில், `சந்தோஷமான செய்தி மக்களே... பாடகியாக அறிமுகமாகியிருக்கிறேன்! தேவராட்டம் திரைப்படத்தில் மதுர பளபளக்குது பாடலில் ஒரு பகுதி பாடியிருக்கிறேன். படம் வெளியாவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய அன்பும் ஆதரவும் தேவை மக்களே..!' எனப் பதிவிட்டிருக்கிறார்.
சூப்பர் சிங்கர் ஆங்கரே சூப்பர் சிங்கரா... சபாஷ்!