Published:Updated:

`நடிகர் சங்க பிரச்னையை நாட்டுப் பிரச்னையாக மாத்திய புண்ணியவான்களே' - 'அச்சமில்லை அச்சமில்லை' டீஸர்

மலையரசு
`நடிகர் சங்க பிரச்னையை நாட்டுப் பிரச்னையாக மாத்திய புண்ணியவான்களே' - 'அச்சமில்லை அச்சமில்லை' டீஸர்
`நடிகர் சங்க பிரச்னையை நாட்டுப் பிரச்னையாக மாத்திய புண்ணியவான்களே' - 'அச்சமில்லை அச்சமில்லை' டீஸர்

இயக்குநர் அமீர் தயாரித்து நடிக்கும், ‘அச்சமில்லை அச்சமில்லை' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அமீர் தயாரித்து நடிக்கும் படம், ‘அச்சமில்லை அச்சமில்லை’. நடிகை சாந்தினி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரைத் தவிர புதுமுகங்கள் நிறைய நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் முத்து கோபால் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, அருண் குமார் என்பவர் இசை அமைத்துள்ளார். நொய்யல் ஆறு மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயிகளின் பிரச்னைகளை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. படத்தில், அரசியல்வாதியாக அமீர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. சமூக ஆர்வலர்கள் புடைசூழ இந்த விழா நடந்தது. 

இதில் பேசிய அமீர், "ஒரு நல்ல கருத்தையும் கதையையும் கொண்டுள்ள படம், 'அச்சமில்லை அச்சமில்லை'. இது, பாதியில் நின்றிருந்தது. அதை நிறைவுசெய்ய தயாரித்து நடித்துக்கொடுத்துள்ளேன். பாமரர்களுக்கான, நடுத்தர மக்களுக்கான சினிமாவை எடுத்துள்ளோம். இங்கு, மேல்தட்டு மக்கள் சினிமாவும் பார்ப்பதில்லை, வாக்குப்பதிவும் செய்வதில்லை. அரசியலுக்கு சினிமாக்காரர்கள் வரட்டும் என்றே நான் நினைக்கிறேன். கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என்று கூறும் நிலைக்கு இருக்கும் தலைவர்களுக்கு இவர்கள் பரவாயில்லை. இதனால்தான், ஜெயலலிதா அம்மையார் இவர்களைப் பேசவிடாமல் வைத்திருந்தார் என்று நினைக்கிறேன். சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது என்றால், டெல்லியிலிருந்துதான் கெட்டுப்போயிருக்கிறது” எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், இந்தப் படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இந்த டீஸரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். `நடிகர் சங்க பிரச்னையை நாட்டுப் பிரச்னையாக மாத்திய தமிழகப் புண்ணியவான்களே' என வசனங்கள், காட்சி அமைப்புகள், பின்னணி இசை என டீஸர், வரவேற்பைப்பெற்றுவருகிறது. 

மலையரசு