Published:Updated:

`சூப்பரா வரும்!' - அர்ஜுன் ரெட்டி ரீமேக் `கபீர் சிங்'-கைப் பாராட்டிய பிரபாஸ்

தார்மிக் லீ
`சூப்பரா வரும்!' - அர்ஜுன் ரெட்டி ரீமேக் `கபீர் சிங்'-கைப் பாராட்டிய பிரபாஸ்
`சூப்பரா வரும்!' - அர்ஜுன் ரெட்டி ரீமேக் `கபீர் சிங்'-கைப் பாராட்டிய பிரபாஸ்

தெலுங்கில் விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த 'அர்ஜுன் ரெட்டி' டோலிவுட்டைத் தாண்டியும் கவனம் ஈர்த்தது. அதுமட்டுமன்றி பாலிவுட், கோலிவுட் பக்கம் பல தயாரிப்பாளர்கள் இதன் ரீ-மேக் ரைட்ஸையும் வாங்கிவிட்டனர். ஒரிஜினல் வெர்ஷனான 'அர்ஜுன் ரெட்டி'யின் இயக்குநர் சந்தீப் வாங்காவே இதைப் பாலிவுட்டிலும் 'கபீர் சிங்' என்ற பெயரில் இயக்கியிருக்கிறார். 

`சூப்பரா வரும்!' - அர்ஜுன் ரெட்டி ரீமேக் `கபீர் சிங்'-கைப் பாராட்டிய பிரபாஸ்

பாலிவுட் ஹீரோவான ஷாகித் கபூர் படத்தில் கபீர் சிங்காக நடித்திருக்கிறார். 'எம்.எஸ்.தோனி' படத்தில் நடித்த கியாரா அத்வானி ஷாகித்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 'அர்ஜுன் ரெட்டி' என்ற டைட்டிலை பாலிவுட்டுக்குத் தகுந்தாற்போல் 'கபீர் சிங்' என்று வைத்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமன்றி, 'பாகுபலி' பட புகழ் பிரபாஸ், டீசரைப் பார்த்தபின் ஷாகித் கபூரை போனில் அழைத்து ஏழு நிமிடங்கள் பேசி, 'ஒரிஜினைலவிட இது கண்டிப்பா சூப்பரா இருக்கும்' என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அவர் 'சாஹோ' படத்தின் வேலைகளில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தி இருவருடனும் காஸ்டியூம் டிசைனராக வேலை பார்த்த ஹாக்கிம் என்பவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். சமீபத்தில்தான் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. வரும் ஜூன் 21-ம் தேதி படம் ரிலீஸாகிறது.