சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ஃபர்ஸ்ட் லுக்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ஃபர்ஸ்ட் லுக்
வி.ஜே ரியோ கதாநாயகனாக அறிமுகமாகும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
யூடியூபை கலக்கும் பிளாக் ஷீப் டீமை சேர்ந்த கார்த்திக் வேணுகோபாலன் இயக்கிவரும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், புட் சட்னி ராஜ்மோகன் ஆகியோர் நடித்து வருகின்றனர். யு.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷபீர் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பைக் கையாண்டிருக்கிறார். எஸ். கமலநாதன் கலை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார்.
ரிலீஸ் செய்வதற்கான இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கும் இப்படத்தின் த்மிழ் புத்தாண்டையொட்டி பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே டைட்டில் அறிவிப்புபோது, படத்துக்கான கதையையும், டைட்டில் வைப்பதில் இருந்த சிக்கல்களையும் ஒரு கதையைப்போல் சூப்பர் டீலக்ஸ் விஜய் சேதுபதி பாணியில் சொல்லி அறிவித்தார்கள். அதேபோல் இந்தப் பர்ஸ்ட் லுக்கை செய்திகளில் பிரேக்கிங் நியுஸ் பாணியில் போஸ்டர் டிசைன் செய்து அறிவித்துள்ளனர். 'கனா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.