Published:Updated:

`மஜாக்கா மால்.. எங்க அண்ணன் அந்த மாதிரி ஆள்!' - சந்தானத்தின் `A1' டீஸர்

சந்தானம் நடிக்கும் 'A 1' பட டீஸர் இன்று வெளியிடப்பட்டது

இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து  சமீபத்தில் வெளியாகிய ஹாரர் காமெடி படம் `தில்லுக்கு துட்டு 2' நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு, சந்தானம் நடித்து வரும் 'A 1' படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. சந்தானத்தின் நண்பரான ராஜ் நாராயணன் சர்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.  நாளைய இயக்குநர் நான்காவது சீசனின் டைட்டில் வின்னரான ஜான்சன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

'A 1' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தாரா அலிஸா பெர்ரி நடிக்கிறார். அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படமும்கூட. படத்தின் முதல் பாதி ரொமான்டிக் காமெடி ஜானரிலும் இரண்டாவது பாதியில் டார்க் காமெடி ஜானரிலும் எடுக்க இருக்கின்றனர். வடசென்னை இளைஞராகச் சந்தானமும், அக்கிரஹாரத்துப் பெண்ணாகத் தாராவும் நடித்துள்ளனர். 

சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர் 'கோலமாவு கோகிலா' ரெடின், டைகர் கார்டன்  தங்கதுரை, ஆதி படத்தில் வில்லனாக நடித்த சாய்குமார் குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

சர்வர் சுந்தரம் படத்துக்கு பிறகு சந்தானம் நடிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தானம் நடிப்பில் `சர்வர் சுந்தரம்', `மன்னவன் வந்தானடி', `ஓடி ஓடி உழைக்கணும்' ஆகிய படங்கள் திரைக்கு வரத் தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது.