Published:Updated:

``கான்வென்ட்ல படிக்க வெச்சேன், 13 வயசுல வேலைக்கு அனுப்புனதா சொல்றாளே!" - சங்கீதாவின் அம்மா பானுமதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``கான்வென்ட்ல படிக்க வெச்சேன், 13 வயசுல வேலைக்கு அனுப்புனதா சொல்றாளே!" - சங்கீதாவின் அம்மா பானுமதி
``கான்வென்ட்ல படிக்க வெச்சேன், 13 வயசுல வேலைக்கு அனுப்புனதா சொல்றாளே!" - சங்கீதாவின் அம்மா பானுமதி

`பிதாமகன்’ சங்கீதாவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார், அவரது தாய் பானுமதி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``வயதான என்னை வீட்டை விட்டுத் துரத்திவிட்டு, நான் வசிக்கும் வீட்டை அபகரிக்க முயற்சி செய்கிறார் என் மகள் சங்கீதா" என `பிதாமகன்’ சங்கீதா மீது சில தினங்களுக்கு முன் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார், அவரது தாய் பானுமதி.
இந்தப் புகார் குறித்துக்  கேட்டதற்கு, ‘என் பெர்சனல் விஷயம் இது; பொதுவெளியில் பேச விரும்பவில்லை’ என முதலில் மறுத்தார், சங்கீதா. பிறகு அவரே, ட்விட்டரில் இது தொடர்பாக சில கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். அதில், தன் தாய் தன்னைப் படிக்கவிடாமல் 13 வயதிலேயே வேலைக்கு அனுப்பியதாகவும், வெற்றுக் காசோலைகளில் தன்னிடம் கையெழுத்து வாங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தன்னுடைய இரண்டு சகோதரர்கள் குறித்தும் சில விஷயங்களைப் பேசியிருந்தார்.
இந்த விவகாரம் தீர்வை எட்டாமல் போய்க்கொண்டிருக்கும் சூழலில், சங்கீதாவின் அம்மா பானுமதியிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினேன்.


``கற்பனையா பேசிக்கிட்டிருக்காங்க அவங்க. நான் என்ன பதில் சொல்றது?! 79-ல் பிறந்தாங்க. அவங்களுக்குப் 11 வயசு இருக்கிறப்போ, அவங்க அப்பா தவறிட்டார். பிறகு, அவங்களுக்கு எல்லாமே நான்தான். படிக்க வெச்சது, சினிமாவுக்கு வந்தபிறகு சின்ன வதந்திகூட வராதபடி நல்லா வளர்த்தது... எல்லாம் நான்தான். சங்கீதாவைக் கான்வென்ட்ல படிக்க வெச்சேன். ஆனா இன்னைக்கு, பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாம நான்தான் நிறுத்துனேன்னு சொல்லியிருக்காங்க. 13 வயசுல வேலைக்கு அனுப்புனதா சொல்றாங்களே, `பூஞ்சோலை' படம் ரிலீஸ் ஆனப்போ, அவங்க ப்ளஸ் ஒன் ஸ்டூடன்ட். அந்த வயசுலதான் எல்லோரும் ப்ளஸ் ஒன் படிப்பாங்களா?! 

கங்கை அமரன் அப்போ, அவரோட பையன் வெங்கட் பிரபுவுக்கு ஜோடியா நடிக்கணும்னு சொல்லிக் கேட்டார். யதார்த்தமா அமைஞ்சதுதான், அந்த வாய்ப்பு. கங்கை அமரனின் மனைவி எனக்கு உறவினர். அவங்க மூலமா வந்த வாய்ப்பு அது. அப்போகூட மேஜரா இருந்தாலும், சங்கீதாவுக்கு விருப்பம் இருக்கா, இல்லையானு கேட்டுத்தான் அந்த முடிவை எடுத்தேன். அவள் சினிமாவுல நடிக்கணும்னு நான் ஒருபோதும் கட்டாயப்படுத்தலைங்க. வேணும்னா பழைய `ஆனந்த விகடன்’ல சங்கீதா பேட்டி தந்திருப்பாங்களே, அதுல என்ன சொல்லியிருக்காங்க... நீங்களே செக் பண்ணிப் பாருங்க. எங்க அப்பா பெரிய தயாரிப்பாளரா இருந்தவர். எனக்கு யாரையும் அப்படி வற்புறுத்தி, அது மூலமா வர்ற வருமானத்துலதான் சாப்பிடணும்னு எந்த அவசியமும் இல்லை." என்றவர், சில நிமிட மௌனத்திற்குப் பின் மீண்டும் தொடர்ந்தார்.

``பிரச்னைக்குக் காரணம் இந்த வீடுதானே... சரி, இந்த வீடு உன்னோட பெயருக்கு எப்படி வந்தது, நான் வாங்குன வீடுதானே அது, நானேதானே உன்மேல இருக்கிற பாசத்துல உனக்கு எழுதிக் கொடுத்தேன்... அப்போ உன் அண்ணன்கள் வெளிநாடுல இருந்தாங்க. ஒரு நம்பிக்கையில, பிரியத்துல பொண்ணு பெயருக்கு எழுதிக் கொடுத்தேன். அந்த நம்பிக்கை மோசம் போயிடுச்சே!" எனக் கொதிக்கிறார். 

``வேற ஒண்ணுமில்லீங்க... எல்லாம் பண ஆசைதான். உலகமே அதைச் சுத்திதானே இயங்குது. ‘காசேதான் கடவுளடா கடவுளுக்கும் இது தெரியுமடா’ன்னு பழைய சினிமாவுல பாடலையா?! காசு என்ன வேணாலும் பண்ணும்ங்கிறதுக்கு உதாரணம்தான் இந்தச் சம்பவம்." என்றவரிடம், 'வீட்டிலேயே பேசிப் பிரச்னையைத் தீர்த்திருக்கலாமே?" என்றேன். 

``சங்கீதாவுக்குப் பழைய நண்பர்கள் யாருமே இப்போ இல்லை. கல்யாணத்துக்குப் பிறகு பழைய சர்க்கிளை கட் பண்ணியாச்சு. இப்போ அந்த வீட்டுக்கு வர்ற எல்லோருமே க்ரிஷ் குடும்பத்தினரும், அவர் நண்பர்களும்தான். நானும் சங்கீதா - க்ரிஷ் கல்யாணத்துக்குப் பிறகு, அவங்க லைஃப் பத்தி ஒண்ணும் கேட்டுக்கிறதில்லை. நான்பாட்டுக்கு ஒதுங்கி வாழ்ந்துக்கிட்டிருக்கேன். ஒரே வீட்டுல இருந்தும், அம்மாவும் பொண்ணும் பேசியே வருடக் கணக்குல ஆகுதுன்னா... வேறென்ன சொல்றது. என்ன நடக்கணும்னு இருக்கோ, நடக்கட்டும்!" என்கிறார், விரக்தியுடன். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு