Published:Updated:

``லாரன்ஸ் பப்ளிசிட்டிக்குதான் இதெல்லாம் பண்றார்" - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டம்

``லாரன்ஸ் பப்ளிசிட்டிக்குதான் இதெல்லாம் பண்றார்" - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டம்
``லாரன்ஸ் பப்ளிசிட்டிக்குதான் இதெல்லாம் பண்றார்" - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டம்

ராகவா லாரன்ஸ், தனக்கும் தன்னைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் ரசிகர்களுக்கும் மன உளைச்சல் தரும் வகையில் குறிப்பிட்ட கட்சியின் `ஒரு சில தொண்டர்கள்' செயல்படுவதாக சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியையும் பெயர் குறிப்பிடாமல் குற்றம்சாட்டியிருந்தார்.

நேற்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ``லாரன்ஸ் மீது எனக்கு எப்போதும் வருத்தமில்லை. மதிப்புதான். யாராவது ரெண்டுபேர் புரிதலில்லாமல் விமர்சித்து இருக்கலாம். அப்படி இருந்தா அது தப்பு. அது யாருன்னு கண்டுபுடிச்சு நடவடிக்கை எடுக்கலாம்.போலியான முகநூல் பக்கங்களை வெச்சுகிட்டு அந்தமாதிரி வேலைகள் நடக்க வாய்ப்பிருக்கு. அப்படி செஞ்சிருந்தா அது தவறு. அதுக்கா நான் தம்பி லாரன்ஸ்கிட்ட என் வருத்தத்தை தெரிவிச்சுக்கிறேன்" என்றார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியினர் மேல் லாரன்ஸ் வைத்த விமர்சனத்துக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது முகநூலில் சில பதில்களையும், கேள்விகளையும், விமர்சனங்களையும்  வைத்திருந்தார். அதில்,   

``அதுசரி... எச்சரிக்கையும் சவாலும் விடுமளவுக்கு என்னதான் நடந்தது. அப்படி எங்குதான் உங்களிடம் சீமானின் தம்பிகள் மோதினார்கள், உங்களைப் பற்றி எழுதியது யார், திட்டியது யார், உங்க கூட மோதவா நாங்க வேலை செய்றோம். சம்பந்தமில்லாமல் ஏன் இந்த விவகாரத்தை பேசணும். யார் தூண்டிவிட்டு இந்த அறிக்கை. நாம உண்டு நம்ம வேலையுண்டு படத்தை ரிலீஸ் பண்ணிட்டு போலாமே... படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் பப்ளிசிட்டிக்கு உங்களுக்கு யாராவது வேணும் என்ன?" என வினவியுதுடன் 

``இதற்கு நீங்கள் பெயர் போட்டு, முகவரியிட்டு நேரடியாகவே செய்தியாக்கியிருக்கலாம். அண்ணன் சீமானுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடப்போவதில்லை. கருத்தியல் ரீதியான பல எதிர்மறைக் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறார். ஓடி ஒளிந்ததில்லை. இந்தக் கடிதம் ஏதோ இரண்டாங் கிளாஸ் பிள்ளை சொல்ற அளவு அமெச்சூராக இருக்கிறது. யாரிடம் அடிமை வேலை செய்துகொண்டு எங்கள் கட்டுப்பாடான கூட்டுக்குள் கல்லெறிந்து பார்க்கும் ஈன வேலையைச் செய்கிறீர்கள் என்பது எம்மக்களுக்கு நன்றாகவே தெரியும்... அதற்கு வேறு நல்ல காரணத்தைத் தேடிப்பிடித்திருக்கலாம். வலுவான வேறு யாரையாவது அவர்கள் அனுப்பியிருக்கலாம்.. பேய்ப் படத்தில்கூட இடுப்பிலேறி உட்கார்ந்துகொண்டு காமெடி செய்கிற உங்களைப் போய் இறக்கியிருக்காங்க பாருங்க... சிரிக்கிறதா... அழுறதான்னு தெரியலை. சவால் விடணும்... மோதிப் பார்க்கணும்னா நீங்க சவால் விட வேண்டியது ஸ்ரீரெட்டிகிட்டதான்... அவங்க சொன்ன குற்றச்சாட்டுக்கு முதல்ல பதில் சொல்லுங்க... அவங்க சொன்ன குற்றச்சாட்டை வாய்ப்பு கொடுத்து வாயடைச்ச நீங்களெல்லாம் என்ன பேச முடியும். எதையும் ஆராய்ந்தறிந்து பேசுகிற பிள்ளைகள்  உங்களை என்ன தவறாகப் பேசினார்கள் என்பதை சீமான் அண்ணனுக்கு போனில் அழைத்துச் சொல்லியிருக்கலாம்.  உங்கள் படத்துக்குப் பப்ளிசிட்டி  தேவைப்பட்டால் சொல்லுங்கள்... அண்ணனிடம் சொல்லி ஒரு வீடியோ விளம்பரம் வாங்கித் தருகிறேன்... நாங்கள் மோடி... ராகுல் காந்தி என மோதிக்கொண்டிருக்கிறோம்.. உங்களை எங்கள் எதிரிப்பட்டியலின் இறுதியில்கூட வைக்கவில்லை"  என்ற விமர்சனமும் செய்திருந்தார்.

இதுபற்றி சுரேஷ் காமாட்சியிடம் பேசும்போது, ``நிருபர்கள் கேட்ட கேள்விக்கான பதிலை பதிவு செஞ்சிருக்கார் சீமான் அண்ணன். அப்போ அவர் அந்தப் பதிவை முழுசா படிக்கல. நேத்து இரவுதான் அந்தப் பதிவை படிச்சிருக்கார், அண்ணன். லாரன்ஸ் அரசியலுக்கு வரணும்னா கத்துக்கிட்டு வரவேண்டியதுதானே அதுக்கு எங்கள பத்தி பேச வேண்டிய அவசியம் இல்ல. லாரன்ஸ் பப்ளிசிட்டிக்குதான் இதெல்லாம் பண்றார்" என்றார். 

அடுத்த கட்டுரைக்கு