Published:Updated:

`இது இரண்டாவது திருமணம் அல்ல!’ - ட்வீட் குறித்து 'மூடர்கூடம்' நவீன்

பிர்தோஸ் . அ
`இது இரண்டாவது திருமணம் அல்ல!’  - ட்வீட் குறித்து 'மூடர்கூடம்' நவீன்
`இது இரண்டாவது திருமணம் அல்ல!’ - ட்வீட் குறித்து 'மூடர்கூடம்' நவீன்

`மூடர்கூடம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் நவீன். தற்போது இவர் `அலாவுதீனின் அற்புத கேமரா' படத்தை இயக்கி நடித்தும் இருக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோயினாக கயல் ஆனந்தி நடித்திருக்கிறார். இந்த நிலையில், நவீன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 

எனக்கும் சிந்துவுக்கும் நடந்தது பதிவுத் திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவுப் பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள். #மனிதசமத்துவம் என்ற ஹேஸ்டேக்குடன் முடித்திருந்தார். இதைப் பார்த்த பலரும் இவருக்குத் திருமணம் நடந்து முடிந்துள்ளது என்பது போன்ற பதிவுகளை சமூகவலை தளங்களில் இட்டு வந்தனர். இதுகுறித்து நவீனிடம் பேசினேன். 

`` `பி.ஜே.பி-க்கு என்னுடைய ஓட்டு கிடையாது' என்ற போக்கில் தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி கொடுத்திருந்தேன். இந்தப் பேட்டியைப் பார்த்த பி.ஜே.பி ஆதரவாளர்கள் `இவன் ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவன். ஒரு இந்துப் பெண்ணை இஸ்லாமியரா மதம் மாற்றி திருமணம் பண்ணிட்டான். இவனொரு `லவ் ஜிகாதி' என்பது போன்று பதிவுகளைச் சொல்லிட்டு இருந்தாங்க. இதற்கெல்லாம் ஒரு பதிலாகத்தான் ட்விட்டரில் `எனக்கும் சிந்துவுக்கும் நடந்தது பதிவுத் திருமணம்' என்று பதிவு போட்டிருந்தேன். இதைப் பார்த்த சில பத்திரிகையாளர்கள் `நவீன் திடீர் பதிவு திருமணம்'னு போட்டுட்டாங்க. எனக்குத் திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இரண்டு குழந்தைகளே இருக்காங்க. 

இன்னும் சிலர் நான் ஏதோ இரண்டாவது திருமணம் பண்ணிக்கிட்டேன்னு நினைச்சிட்டாங்க. இந்தச் செய்தியெல்லாம் பார்த்துட்டு வீட்டில் மனைவி சிரிச்சாங்க. பொதுவான கருத்து ஒன்று பொது வெளியில் பேசும்போது கண்டிப்பா எதிர்ப்புகள் பலமா இருக்கும்னு தெரியும். கேவலமா திட்டுறதுக்கு ஆட்கள் இருக்கத்தான் செய்வாங்க. வேலை வெட்டியில்லாமல் இப்படி செய்யும் வேடிக்கை மனிதர்களை வேடிக்கையாகவே கடந்து விடுவது உண்டு'' என்ற நவீனிடம் 'பி.ஜே.பி' கட்சியை நீங்கள் எதிர்க்க காரணம் என்ன..? என்று கேட்டால், 

நான் எதுக்கும் எதிர்ப்பாளியெல்லாம் இல்லை. சமத்துவத்தின் ஆதரவாளன். சமத்துவம் எது மூலமா கெடுதோ அதற்கு எதிரா குரல் கொடுக்குறது என்னுடைய கடமைனு நினைக்குறேன். அது தி.மு.க, நாம் தமிழர் கட்சி, கமல் சார் யாராக இருந்தாலும் எதிர்த்து குரல் கொடுப்பேன். அது நம்முடைய கடமையும்கூட '' என்று சொல்லி முடித்தார் இயக்குநர் நவீன். 

பிர்தோஸ் . அ

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..