Published:Updated:

'இது குண்டர்களின் வேலை; சௌகிதாருடையது அல்ல!' - அனுராக் காட்டம்

தார்மிக் லீ
'இது குண்டர்களின் வேலை; சௌகிதாருடையது அல்ல!' - அனுராக் காட்டம்
'இது குண்டர்களின் வேலை; சௌகிதாருடையது அல்ல!' - அனுராக் காட்டம்

பாலிவுட்டின் முக்கிய இயக்குநர் அனுராக் காஷ்யப். 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்து கோலிவுட் பக்கமும் வந்துவிட்டார். தற்போது 'ANI' செய்தி நிறுவனம் வெளியிட்ட நியூஸை விமர்சித்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். 

'இது குண்டர்களின் வேலை; சௌகிதாருடையது அல்ல!' - அனுராக் காட்டம்

சமீபத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தைப் பார்த்த அனுராக் காஷ்யப், தியாகராஜன் குமாரராஜாவை மென்ஷன் செய்து, ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஆள் இவர். இந்நிலையில், 'ANI' சேனல் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், 'பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த ரமேஷ் கத்தாரா என்பவர், குஜராத்தின் ஃபேத்புரா எனும் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ஜ.க-வுக்கு பதில் காங்கிரஸுக்கு வாக்களித்தால், ஆதார் கார்டும், அதிலிருக்கும் புகைப்படங்களும் எங்களுக்குத் தெரிந்துவிடும். வாக்கு எண்ணிக்கை குறைவாக இருந்தாலோ, வாக்களிக்காமல் இருந்தாலோ எங்களுக்குத் தெரிந்துவிடும். பின், வாக்களிக்காத நபர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்காமல் போய்விடும்' என்று குறிப்பிட்டிருந்தது. இந்தச் செய்தியை மென்ஷன் செய்து, 'இது நேரடியான மிரட்டல். இது கொடுமைப்படுத்துதல். இது, குண்டர்கள் செய்யும் வேலை, சௌகிதாருடயது அல்ல!' என ரீ-ட்வீட் செய்திருக்கிறார் அனுராக் காஷ்யப். 

தார்மிக் லீ