Published:Updated:

`` `இனி என்னை நடிக்க வைக்கிறது கஷ்டம்'னு முன்கூட்டியே சொன்னார்!" - செளந்தர்யாவின் நினைவுகள்

`` `இனி என்னை நடிக்க வைக்கிறது கஷ்டம்'னு முன்கூட்டியே சொன்னார்!" - செளந்தர்யாவின் நினைவுகள்

``இனிமேல் என்னை நடிக்க வைக்கிறது கஷ்டம். முடிஞ்ச வரைக்கும் என்கிட்ட வேலை வாங்கிடுங்க. இனி இதுக்கெல்லாம் வாய்ப்பு அமையாது'னு ஒருநாள் செளந்தர்யா சொன்னாங்க. அதற்கான அர்த்தம் எனக்குத் தெரியலை."

`` `இனி என்னை நடிக்க வைக்கிறது கஷ்டம்'னு முன்கூட்டியே சொன்னார்!" - செளந்தர்யாவின் நினைவுகள்

``இனிமேல் என்னை நடிக்க வைக்கிறது கஷ்டம். முடிஞ்ச வரைக்கும் என்கிட்ட வேலை வாங்கிடுங்க. இனி இதுக்கெல்லாம் வாய்ப்பு அமையாது'னு ஒருநாள் செளந்தர்யா சொன்னாங்க. அதற்கான அர்த்தம் எனக்குத் தெரியலை."

Published:Updated:
`` `இனி என்னை நடிக்க வைக்கிறது கஷ்டம்'னு முன்கூட்டியே சொன்னார்!" - செளந்தர்யாவின் நினைவுகள்

ழகு, யதார்த்தமான நடிப்பு, அசத்தலான நடனம் எனத் தென்னிந்திய சினிமாவில் கலக்கியவர், நடிகை செளந்தர்யா. இவர், எதிர்பாராத வகையில், 2004-ம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் உயிரிழந்த தினம் இன்று (ஏப்ரல் 17). செளந்தர்யாவின் கடைசிப் படம், `அப்தமித்ரா' ('சந்திரமுகி'யின் ஒரிஜினல் வெர்சன். அதுவும் ஒரு மலையாள படத்தின் ரீ-மேக்.). அந்தப் படத்தில் `ரா ரா' பாடலுக்கு செளந்தர்யாவை மிகச் சிறப்பாக நடனமாட வைத்த நடன இயக்குநர் ராதிகா சூரஜித், செளந்தர்யாவின் நினைவுகள் குறித்துப் பேசுகிறார்.

`` `இவன்' படத்தில் வேலை செய்யும்போதுதான் செளந்தர்யாவுடன் எனக்கு நட்பு ஏற்பட்டுச்சு. அப்படத்துல கர்னாட இசைப்பாடகி சுதா ரகுநாதன் பாடிய, மூணு பாடல்களுக்கு நான்தான் நடன இயக்குநர். `என்னை என்ன செய்தாய்' பாடல் ஷூட்டிங்குக்கு முன்தினம் செளந்தர்யாவுக்கு பயங்கர காய்ச்சல். ஆனாலும், ஓரளவுக்கு உடலைச் சரிபடுத்திகிட்டு சரியா ஷூட்டிங்குக்கு வந்துட்டாங்க. அதற்கு முன்பே எங்கிட்ட ஆலோசனை செய்துட்டு, கர்னாட இசைப் பாடகி எப்படிப் பாடுவாங்களோ அதேமாதிரி பயிற்சி எடுத்துட்டுதான் ஷூட்டிங் வந்தாங்க. நான் சொல்லிக்கொடுத்ததுபோல சரியா நடிச்சாங்க. இடையிடையே, `நான் நடிக்கிறது சரியா இருக்கா? ஏதாவது கரெக்‌ஷன் இருக்கா'னு கேட்டுகிட்டே இருப்பாங்க. 

அந்தப் பாடலை இளையராஜா சார் மிகச்சிறப்பா உருவாக்கியிருந்தார். மிகக் கடினமான அந்தப் பாட்டுல நிறைய நுணுக்கமான விஷயங்கள் இருக்கும். அதனால மிகக் கவனமா பாடலை ஷூட் பண்ணினோம். ஒருகட்டத்துல, `கர்னாடக இசைச் சங்கதிகளை கேமராவுக்கு முன்னாடி ஒரு பேப்பர்ல எழுதிகாட்டுறோம். அதைப் பார்த்து சுலபமா பாடிடுங்க'னு சொன்னேன். அதற்கு மறுப்பு சொன்ன செளந்தர்யா, பாடல் வரிகளை மனப்பாடம் செய்துட்டு மிகச் சிறப்பா வாயசைச்சுப் பாடிட்டாங்க. அந்தப் பாடல் ஷூட்டிங் முடிஞ்சதும், எடிட்டிங் பணிகள் நடக்கும்போது படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன் சார் என்னைக் கூப்பிட்டார். போனேன். அப்போது, செளந்தர்யாவின் நடிப்பைப் பார்த்து ஆச்சர்யமாகிட்டோம். ரொம்ப நாளைக்குப் பிறகு, ஒரு ஆர்டிஸ்ட் மிகச் சிறப்பாக கர்னாடக இசைப் பாடலுக்கு வாயசைத்துப் பாடியிருப்பதை பெருமையாகப் பேசினோம். அடுத்த நாள், எடிட்டிங் முடிஞ்ச அந்தப் பாடலை இளையராஜா சாருக்கு ஒளிபரப்பிக்காட்டினோம். அப்போது நானும் அவரைச் சந்திக்கப் போனேன். எழுந்து நின்று எனக்கு வணக்கம் சொன்ன இளையராஜா சார், செளந்தர்யாவின் நடிப்புப் பற்றிப் பெருமையாகப் பேசினார். இது மிக அரிதான பாராட்டுத் தருணம்!" என்கிற ராதிகா சூரஜித், செளந்தர்யாவின் கடைசி சினிமா படத்தில் பணியாற்றிய அனுபவங்களை நெகிழ்ச்சியாகக் கூறுகிறார்.

`` `அப்தமித்ரா’ கன்னடப் படம், செளந்தர்யாவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமானது. அந்தப் படத்தில், `ரா ரா' பாடல் கோரியோகிராபிக்காக, என்னைத் தேர்வு செய்யச் சொல்லி, இயக்குநர் பி.வாசு சார்கிட்ட சொன்னது செளந்தர்யாதான். அதுவும் மிகக் கஷ்டமான பாடல். என்கிட்ட பயிற்சி எடுத்துட்டு, மீண்டும் ஷூட்டிங்குக்கு முன்தின நாள் கடுமையா பயிற்சி எடுத்திருக்காங்க, செளந்தர்யா. அதனால, அவங்க கால் ரொம்பவே சிவந்து போயிடுச்சு. அந்த வலியையும் வெளிக்காட்டிக்காம, இயல்பா நடிச்சாங்க. மைசூரு அரண்மனையிலதான் அந்தப் பாடல் ஷூட்டிங் நடந்துச்சு. நான் வந்தால், உடனே எழுந்து நின்னு மரியாதை கொடுப்பார். அந்த ஷூட்டிங் நேரத்தில், நேரம் காலம் பார்க்காம, நிறைய ரசிகர்கள் செளந்தர்யாவைப் பார்க்க வருவாங்க. அவரை, குழந்தைகளுக்குப் பெயர் வைக்கச் சொல்லுவாங்க. சோர்வை வெளிக்காட்டிக்காம, எல்லா ரசிகர்கள்கிட்டயும் அன்பா பேசுவாங்க.

`என்னைச் சிறப்பா நடனமாட வெச்சுடுங்க மேடம். இனிமேல் என்னை நடிக்க வைக்கிறது கஷ்டம். முடிஞ்ச வரைக்கும் என்கிட்ட வேலை வாங்கிடுங்க. இனி இதுக்கெல்லாம் வாய்ப்பு அமையாது'னு ஒருநாள் செளந்தர்யா சொன்னாங்க. அதற்கான அர்த்தம் எனக்குத் தெரியலை. ஒருவேளை அரசியல் பயணத்துல ஈடுபடுவாங்கனு நினைச்சேன். ஆனா, அந்தப் பாடல் ஷூட்டிங் முடிஞ்சு, இரண்டு வாரம் இருக்கும். ஒருநாள், செளந்தர்யா விமான விபத்தில் இறந்துட்டதா செய்தி வந்துச்சு. அதைக் கேட்டு அதிர்ச்சியாகி, ரொம்பவே அழுதேன். படம் ரிலீஸாகும் முன்பு, பி.வாசு சார் என்னைக் கூப்பிட்டு `ரா ரா' பாடலை ஒளிபரப்பிக்காட்டினார். செளந்தர்யாவின் நடிப்பு மற்றும் டான்ஸ் திறனைப் பார்த்து, நாங்க இருவருமே ரொம்ப நெகிழ்ந்துபோனோம். செளந்தர்யாவின் மரணத்துக்குப் பிறகுதான், அந்தப் படம் ரிலீஸாச்சு. படத்துக்கும், செளந்தர்யாவுக்கும் நிறைய விருதுகள் கிடைச்சுது. அதையெல்லாம் நேரில் பார்க்க அவங்களுக்குக் கொடுத்து வைக்கலை. செளந்தர்யாவின் சிரிப்பு, அவர் சிரிக்கும்போது லட்சணமாக இருக்கும். அதிகம் பேசமாட்டார். ரொம்ப எளிமையா இருப்பார். சின்ன வயசுலயே அவங்க இறந்துட்டது, சினிமா துறைக்கு மிகப்பெரிய இழப்பு" என உருக்கமாகக் கூறுகிறார், ராதிகா சூரஜித்.