Published:Updated:

`இத்தனை வருஷம் ஆகியும் இன்னும் ஓட்டர் ஐடி கிடைக்கல!' - தொகுப்பாளினி தாப்பா வேதனை

வே.கிருஷ்ணவேணி

`என் அப்பா அரசுத் துறையில் இருக்கிறார். நான் சின்ன வயசிலிருந்து இப்போ வரைக்கும் சென்னையில, சென்னைப் பொண்ணாதான் இருக்கேன். இருந்தும் எங்க குடும்பத்தில் யாருக்கும் ஓட்டர் ஐடி கிடைக்கல' எனப் புலம்புகிறார் ஆதித்யா தொகுப்பாளினி ஷர்மிளா தாப்பா. 

ஆதித்யா சேனலில் லைவ் ஷோக்களை தொகுத்து வழங்கிவரும் தாப்பா, அஜித் படங்களான `வேதாளம்', `விஸ்வாசம்' எனச் சில படங்களில் நடித்திருக்கிறார்.

`இத்தனை வருஷம் ஆகியும் இன்னும் ஓட்டர் ஐடி கிடைக்கல!' - தொகுப்பாளினி தாப்பா வேதனை

``இதுவரை ஃபேமிலி கார்டு முதல் பாஸ்போர்ட் வரை எல்லாமே வாங்கிட்டோம். ஆனால், ஓட்டர் ஐடியும் இன்னும் எங்களுக்குக் கிடைக்கல. காரணம் எங்களுடைய தோற்றம். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குனு நீங்க நினைக்கலாம். உண்மை அதுதான். ஒரு முறை ஓட்டர் ஐடி லிஸ்ட் எடுக்க எங்க வீட்டுக்கு வந்தாங்க. வந்தவர், டாக்குமென்டைக் கூடப் பார்க்கல. எங்களை ஏற இறங்கப் பார்த்தவர்,  `உங்களுக்கு ஓட்டர் ஐடி எல்லாம் கொடுக்க மாட்டாங்கம்மா'னு சொல்லி ரிஜக்ட் பண்ணிட்டுப் போயிட்டார். கையைப் பார்த்து ஜோசியம் சொல்ற மாதிரி. முகத்தை வைத்து ஓட்டர் ஐடி கிடையாதுனு சொல்லிட்டுப் போயிட்டார். 

`இத்தனை வருஷம் ஆகியும் இன்னும் ஓட்டர் ஐடி கிடைக்கல!' - தொகுப்பாளினி தாப்பா வேதனை

கொஞ்ச நாள் கழிச்சு எங்க வீட்டுக்கு எனக்கு மட்டும் ஓட்டர் ஐடி தபாலில் வந்தது. அதற்குப் பின்னாடியே ஒரு லெட்டரும் வருது. அந்த கார்டால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அதனால், அதைப் பயன்படுத்த வேண்டாம்னு குறிப்பிட்டிருந்தது. அதற்குப் பிறகும் எவ்வளவோ முயற்சிப் பண்ணினோம். ஆனால், இதுவரை எங்க குடும்பத்தில் யாருக்கும் கிடைக்கல.'' என்றவர், 

ஒவ்வொரு தேர்தலின் போதும், தோற்றவர்களை `ஒரு குடும்பத்தோட ஓட்டு இல்லாததாலதான் தோத்துட்ட'னு மனசுக்குள்ள நினைச்சுப்பேன்' எனச் சிரிக்கிறார் தாப்பா. 

'இது ஜனநாயக நாடு. இந்த நாட்டுக்கு வந்து, எத்தனையோ பேரின் மனசுல இடம்பிடிச்சிருக்கேன். ஆனால், அடிப்படை உரிமை கிடைக்கலங்கிறது எவ்வளவு பெரிய மனவருத்தம் என்பது என்னைப் போல அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும். நேபாளி என்கிற பெயரும், எங்களுடைய முகத்தோற்றமும் உரிமையை மறுக்க முடியும் என்பதை என் வாழ்க்கையில்தான் பார்க்கிறேன்' எனும்போது தாப்பாவின் குரலில் வேதனை வெளிப்பட்டது.  
 
வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.
பிரியங்கா.ப