Published:Updated:

`` `சின்னத்தம்பி' ரீமேக், 33%, அரசியல் மனநிலை!’’ - குஷ்பு ஷேரிங்ஸ்

`` `சின்னத்தம்பி' ரீமேக், 33%, அரசியல் மனநிலை!’’ - குஷ்பு ஷேரிங்ஸ்
`` `சின்னத்தம்பி' ரீமேக், 33%, அரசியல் மனநிலை!’’ - குஷ்பு ஷேரிங்ஸ்

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, நடப்பு அரசியல் குறித்தும், சினிமா குறித்தும் பேசியிருக்கிறார்.

குஷ்புவுக்கு அறிமுகம் தேவையா என்ன... அதிரடி பேச்சைப் படிப்போம்!

``குஷ்புவுக்குக் கோயில் கட்டிய ரசிகனுக்கு என்ன செய்யப்போகிறீகள்?" 

``முதலில் அரசியல் மாற்றம் வரட்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், முதலில் அதற்கொரு அடித்தளம் வேண்டும்.  இங்கே புயல் அடித்தது, வெள்ளம் வந்தது, விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள், பெண் குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை, நீட் தேர்வு பிரச்னை, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு, 8 வழிச் சாலைக்கு நில ஆக்கிரமிப்பு என பல பிரச்னைகள் இங்கு இருக்கின்றன.

`` `சின்னத்தம்பி' ரீமேக், 33%, அரசியல் மனநிலை!’’ - குஷ்பு ஷேரிங்ஸ்

``பெண்கள் அரசியலில் இறங்கத் தயங்குவது ஏன்?" 

``நான் பார்த்த வகையில் ஒரு பெண் அரசியலில் இறங்கினால், முதலில் அவளுடைய குடும்பத்தினர் ஆதரவே அந்தப் பெண்ணுக்குக் கிடைப்பதில்லை. வழக்கமாக அரசியல் பொதுக்கூட்டம் இரவு நேரத்தில் நீண்டநேரம் நடக்கும். நெருக்கியடிக்கும் கூட்டத்தில் செல்லும்போது, பெண்ணுக்குப் பாதுகாப்பு கிடையாது என்ற எண்ணம் தோன்றும். வேறுசில குடும்பங்களில் அரசியலுக்குப் போனால் எங்கே தன் கையைமீறிப் போய்விடுவாளோ என்கிற ஈகோ கணவர், மாமியாருக்கு ஏற்படுகிறது. அது மாறவேண்டும்."

``திரைப்பட நடிகையாக, அரசியலில் ஏற்படும் மனக் கசப்புகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?"

``மன உளைச்சல்,  பிரச்னை  ஏற்பட்டால் முதலில் அந்த இடத்திலேயே இருக்கமாட்டேன்.  எனக்கு ஏற்படும் சங்கடங்களையெல்லாம் என் தலையெழுத்து என சகித்துக்கொண்டு அரசியலில் இருக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனக்கென்று வீடு இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துக்கொள்ள சந்தோஷமாகப் போய்விடுவேன். தவிர, இங்கே எனக்கு எந்த மனக் கசப்புகளும் இல்லை. சந்தோஷமாக அரசியலில் இருக்கிறேன்." 

``உங்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கும்போது எப்படி எதிர்கொள்வீர்கள்?"

``நான் சொன்ன, சொல்லும் அத்தனை கருத்துகளிலும் உண்மை இருக்கிறது. இனிப்பாகப் பொய் சொல்லாமல், கசக்கும் உண்மையைச் சொல்வதால் விமர்சனம் செய்கிறார்கள். உண்மையை ஏற்றுக்கொள்ளும் தைரியமில்லாதவர்கள், அதை ஜீரணிக்க முடியாதவர்கள்தான் என்னை விமர்சனம் செய்கிறார்கள்."

`` `சின்னத்தம்பி' படத்தை ரீமேக் செய்தால், உங்கள் வேடத்தில் நடிக்க யார் பொருத்தமாக இருப்பார்கள்?"

``ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட படத்தை ரீமேக் என்ற பெயரில் கைவைக்கக் கூடாது. வட இந்தியாவிலிருந்து நடிக்க வந்த ஒரு நடிகை தமிழ் பேசி ஆடிப்பாடி சிரித்து, அழுதுபுரண்டு நடித்ததை வியந்து பார்த்தனர். அந்தளவுக்கு நந்தினி கதாபாத்திரத்தை செதுக்கி உருவாக்கி இருந்தார், டைரக்டர் வாசு சார். அந்தப் படம்தான், `சின்னத்தம்பி'. ஆனால், க்ளைமாக்ஸ் காட்சி முழுக்க முழுக்க நந்தினி தோளில் சுமத்தப்பட்டது. நடிப்பதற்கு இன்னொரு முக்கியமான விஷயம் வேறு எந்த ஹீரோக்கள் நடித்திருந்தாலும் என்னை அந்தளவுக்கு விட்டுக்கொடுத்திருக்க மாட்டார்கள். பிரபு சார் அவரது ஹீரோயிஸத்தை பெருந்தன்மையாகக் குறைத்துக்கொண்டார். நான் நடித்த நந்தினி கேரக்டரை எந்த நடிகையும் நடிக்கலாம். ஆனால், பிரபு சார், மனோரமா ஆச்சி நடித்த கேரக்டர்களில் யாரை நடிக்க வைப்பீர்கள்?!" 

`` `சின்னத்தம்பி' ரீமேக், 33%, அரசியல் மனநிலை!’’ - குஷ்பு ஷேரிங்ஸ்

``நீங்கள் அரசியலில் என்னென்ன மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள்?" 

``முதலில் பெண்கள் 33 சதவிகித இட ஒதுக்கீட்டுக்காகப் போராடுவது மாறவேண்டும். ஆண்களுக்கு இணையாக உரிமையைக் கேட்டு பெண்கள் போராட வேண்டும். இனிவரும் காலங்களில் அதற்காகப் போராடுவேன்." 

அடுத்த கட்டுரைக்கு