Published:Updated:

சிவகார்த்திகேயனை ஓரங்கட்டிய `அவெஞ்சர்ஸ்'!- தள்ளிப்போகும் MR.லோக்கல் ரிலீஸ்

எம்.குணா
சிவகார்த்திகேயனை ஓரங்கட்டிய `அவெஞ்சர்ஸ்'!- தள்ளிப்போகும் MR.லோக்கல் ரிலீஸ்
சிவகார்த்திகேயனை ஓரங்கட்டிய `அவெஞ்சர்ஸ்'!- தள்ளிப்போகும் MR.லோக்கல் ரிலீஸ்

சிவகார்த்திகேயன் மார்க்கெட் உச்சத்துக்கு வருவதற்கு முன்பே உஷாராக அட்வான்ஸ் பணம் கொடுத்து அவரது கால்ஷீட்டை வாங்கி வைத்திருந்தார், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஞானவேல், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான படத்துக்கு  ` Mr.லோக்கல்'  என்று டைட்டில் வைத்தனர். இதுவரை இயக்குநர் பொன்ராம் இயக்கிய படங்களில் தொடர்ந்து நடித்துவந்த சிவகார்த்திகேயன், முதன்முறையாக `சிவா மனசுல சக்தி' ராஜேஷ் காம்பினேஷனில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து முடித்துவிட்டனர். அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி ' Mr.லோக்கல்' படம் ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். ஏப்ரல் 26-ம் தேதி 'அவெஞ்சர்ஸ்' ரிலீஸாகும் படத்துக்காகத் தமிழ்நாட்டில் உள்ள ஏகப்பட்ட தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அதனால் சிவகார்த்திகேயன் படத்துக்குக் குறைவான தியேட்டர்களே கிடைத்தன. பிரமாண்டமாக 'Mr.லோக்கல்' படத்தை வெளியிட நினைத்திருந்த தயாரிப்பு தரப்பு தங்கள் படத்தை மே17-ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறது. ஏற்கெனவே `தேவராட்டம்' படத்தை ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் அறிவித்திருந்தனர். இப்போது மே 1-ம் தேதி 'தேவராட்டம்' திரைப்படம் ரிலீஸாகிறது, இந்தப் படத்தையும் சிவகார்த்திகேயன் படத்தை எடுத்த ஞானவேல் ராஜாவே தயாரித்திருக்கிறார்.