Published:Updated:

`2 தேர்தலா இங்கதான் ஓட்டு போட்டேன்; ஆனா இப்போ லிஸ்ட்ல பேர் இல்லனு சொல்றாங்க” - ரோபோ ஷங்கர்

சந்தோஷ் மாதேவன்
`2 தேர்தலா இங்கதான் ஓட்டு போட்டேன்; ஆனா இப்போ லிஸ்ட்ல பேர் இல்லனு சொல்றாங்க” - ரோபோ ஷங்கர்
`2 தேர்தலா இங்கதான் ஓட்டு போட்டேன்; ஆனா இப்போ லிஸ்ட்ல பேர் இல்லனு சொல்றாங்க” - ரோபோ ஷங்கர்

இன்று காலை முதலே 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மிகப் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறவில்லை எனப் பல வாக்காளர்கள் சோஷியல் மீடியாக்களில் கூறியும் வருகின்றனர். அந்த வரிசையில், பிரபலங்களான, நடிகர் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பதால் அவர்கள் வாக்குகளை இன்னும் செலுத்தவில்லை.

`2 தேர்தலா இங்கதான் ஓட்டு போட்டேன்; ஆனா இப்போ லிஸ்ட்ல பேர் இல்லனு சொல்றாங்க” - ரோபோ ஷங்கர்

ஒவ்வொரு தேர்தலின்போதும் யாரோவொரு பிரபலத்துக்கு இப்படிப்பட்டச் சிக்கல் வருவது வழக்கமாகவே இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதது, நடிகர் சிவாஜி கணேசனின் வாக்கை வேறு ஒருவர் செலுத்தியது எனப் பல நிகழ்வுகள் கடந்தகாலங்களில் நடந்துள்ளன. ஆனால், வழக்கத்துக்குமாறாக இந்தமுறை பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், தங்கள் வாக்கைச் செலுத்தாமல் வீடு திரும்பினர்.

இதுகுறித்து ரோபோ சங்கரிடம் கேட்டபோது, ``கடைசியா நடந்த ரெண்டு தேர்தல்லையும் சாலிகிராமத்துல இருக்குற இதே ஸ்கூலுலதான் ஓட்டு போடுறேன். இந்த முறை என்னாச்சுன்னு தெரியல, பெயரே ஓட்டர்ஸ் லிஸ்ட்டுல இல்லைனு சொல்லிட்டாங்க" என்றவர், ``பல வருஷமா இதே வீட்டுலதான் இருக்கோம். அதே அட்ரஸ்ல இருக்குற எங்க ஹவுஸ் ஓனருக்கு ஓட்டு இருக்கு. அப்போ பிரச்னை எங்க வந்துச்சுன்னு தெரியல" என்றார்.

`2 தேர்தலா இங்கதான் ஓட்டு போட்டேன்; ஆனா இப்போ லிஸ்ட்ல பேர் இல்லனு சொல்றாங்க” - ரோபோ ஷங்கர்

மேலும், ``எனக்கு மட்டுமல்லாம, இன்னும் சில பிரபலங்களுக்கும் இதே பிரச்னை வந்துருக்குனு சொன்னாங்க. சிவகார்த்திகேயன்கூட காலையில போன்ல பேசுனாரு. அவரும் ரொம்ப நேரமா எலெக்ஷன் பூத்துலயே நிக்கிறாராம். வேற எதாவது ஏரியா லிஸ்ட்டுல பேரு இருக்கானு தேடிக்கிட்டு இருக்காங்களாம். நானும் முடிஞ்ச வரத் தேடிப்பாத்துட்டேன் என் பேர. காலங்காத்தால 6.30 மணிக்கே பூத்துக்கு முதல் ஆளா போனேன். இப்போ நாலு மணி நேரமாச்சு. இன்னும் ஒன்னும் தெரியல," என்றார்.

`2 தேர்தலா இங்கதான் ஓட்டு போட்டேன்; ஆனா இப்போ லிஸ்ட்ல பேர் இல்லனு சொல்றாங்க” - ரோபோ ஷங்கர்

முன்னதாக, புதன்கிழமையன்று சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில், ``நாளை அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்.. இது நம் கடமை மட்டுமல்ல உரிமையும்கூட" என எழுதியிருந்தார். அதைத் தமிழக தேர்தல் ஆணையம் ரீட்வீட்டும் செய்தது. பிரபலங்களை வைத்து தேர்தல் ஆணையம் வாக்குரிமை குறித்த விழிப்புணர்வுப் பரப்புரை செய்வது ஆரோக்கியமானதுதான். ஆனால், அதேவேளை, அந்தப் பிரபலங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதும் ஆணையத்தின் கடமை அல்லவா?

`2 தேர்தலா இங்கதான் ஓட்டு போட்டேன்; ஆனா இப்போ லிஸ்ட்ல பேர் இல்லனு சொல்றாங்க” - ரோபோ ஷங்கர்

இந்த நிலையில், முதலில் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் வாக்குப்பதிவு செய்ய மறுக்கப்பட்ட சிவகார்த்திகேயனுக்கு, பின்னர் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அவர் தனது வாக்கைப் பதிவுசெய்தார்.