Published:Updated:

சினிமா ஃபைனான்ஸியர் போத்ரா உடல் தகனம்!

அலாவுதின் ஹுசைன்
சினிமா ஃபைனான்ஸியர் போத்ரா உடல் தகனம்!
சினிமா ஃபைனான்ஸியர் போத்ரா உடல் தகனம்!

பல படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்த சினிமா ஃபைனான்ஸியர் போத்ரா, மாரடைப்பால் உயிரிழந்தார். 

'செம்பருத்தி' முதல் 'மொட்ட சிவா கெட்ட சிவா' வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்தவர், முகுல் சந்த் போத்ரா. மயிலாடுதுறையைச் சேர்ந்த போத்ராவின் பூர்வீகத் தொழில் வைர வியாபாரம். சினிமா தயாரிப்பாளர்களுக்குக் கடன் கொடுக்கும் தொழிலில் இறங்கினார். பல சர்ச்சைகளுக்கு நடுவே இந்தத் தொழிலை செய்துவந்தார். இருதயத்தில் 7 அடைப்புகள் இருந்ததால், சிகிச்சை பெற்றுவந்தநிலையில் மாரடைப்பால்  நேற்று மாலை  காலமானர். அவருக்கு 60 வயது. இறுதிச்சடங்குகள் செய்து, இன்று மாலை 4.30 மணியளவில், ஜெயின் முறைப்படி சென்னை சூளைமேட்டில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

போத்ராவுக்கு கரிஷ்மா, ககன் மற்றும் சந்தீப் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். தனக்கு வரவேண்டிய கடன் தொடர்பாக ரஜினி, கஸ்தூரிராஜா மற்றும் பலர் மீது நிறைய வழக்குகள் தொடுத்துள்ளார். போத்ரா மீதும் கந்துவட்டி தொடர்பான பல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. சில வழக்குகளுக்காகச் சிறையும் சென்றுள்ளார் . சினிமா ஆட்கள் யாரும் இறுதிச்சடங்கில் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

அலாவுதின் ஹுசைன்