Published:Updated:

ஏ.ஆர்.முருகதாஸ் கதை; `எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கம் - த்ரிஷா நடிக்கும் புதிய படம்!

உ. சுதர்சன் காந்தி.
ஏ.ஆர்.முருகதாஸ் கதை; `எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கம் - த்ரிஷா நடிக்கும் புதிய படம்!
ஏ.ஆர்.முருகதாஸ் கதை; `எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கம் - த்ரிஷா நடிக்கும் புதிய படம்!

"கடந்த ஆண்டு, தமிழில் '96', மலையாளத்தில் 'ஹே ஜூட்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் என் சினிமா பயணத்தில் மிக முக்கியமானவை" என த்ரிஷா தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ரஜினியுடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை, 'பேட்ட' படத்தில் நிறைவேறியது. அதற்குப் பிறகு, ஹீரோயின் சென்ட்ரிக் கதை ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார், நடிகை த்ரிஷா.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இந்தப் படத்தை, 'எங்கேயும் எப்போதும்', 'இவன் வேற மாதிரி' ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இயக்கவிருக்கிறார். 'ராங்கி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில்  தொடங்கியுள்ளது. ஆக்‌ஷன் அட்வென்சர் கதையில் உருவாகிவரும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவிர, சிம்ரனுடன் இணைந்து மற்றொரு அட்வென்சர் படத்தில் நடிக்கவிருக்கிறார், த்ரிஷா. சுமந்த் ராதாகிருஷணன் என்பவர் இயக்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கேரளா, பிச்சாவரம், தாய்லாந்து எனப் பல்வேறு இடங்களில் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 

உ. சுதர்சன் காந்தி.

Journalist @ Cinema Vikatan