Published:Updated:

ஹீரோயின் சென்ட்ரிக் கதையில் நடிக்கும் இனியா!

உ. சுதர்சன் காந்தி.
ஹீரோயின் சென்ட்ரிக் கதையில் நடிக்கும் இனியா!
ஹீரோயின் சென்ட்ரிக் கதையில் நடிக்கும் இனியா!

'வாகை சூடவா' படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர் இனியா. அதன்பிறகு, 'மெளனகுரு', 'அம்மாவின் கைபேசி', 'புலிவால்', 'நான் சிவப்பு மனிதன்' உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருந்தார். தவிர, மலையாளத்திலும் கன்னடத்திலும் சில படங்களில் நடித்து வந்தார். ஹீரோயின் என்றில்லாமல், குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்துவந்த இவர், இப்போது ஹீரோயின் சென்ட்ரிக் கதை ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.

சாய் கிருஷ்ணா என்பவர் இயக்கும் இப்படத்திற்கு, 'காஃபி' எனப் பெயரிட்டுள்ளனர். சமூகத்தில் பெண்கள் சந்திக்கக்கூடிய சவால்களைப் பற்றிய படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், போலீஸ் ஆபீஸர் கேரக்டரில் நடித்துள்ளார். தவிர, மலையாளத்தில் இந்திரஜித்துடன் 'தாக்கோல்' என்ற படத்திலும், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் 'துரோனா' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில், சிவராஜ்குமார் ஆசிரியராக நடிக்க, அவரது மனைவி கேரக்டரில் நடித்துள்ளார், இனியா. தற்போது மலையாளத்தில் உருவாகிவரும் 'வரலாற்றுக் கதை' படத்தில் நடித்துவருகிறார்.