Published:Updated:

கௌதம் கார்த்திக் நடிக்கும் `தேவராட்டம்' டிரெய்லர்!

தார்மிக் லீ
கௌதம் கார்த்திக் நடிக்கும் `தேவராட்டம்' டிரெய்லர்!
கௌதம் கார்த்திக் நடிக்கும் `தேவராட்டம்' டிரெய்லர்!

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் முத்தையா இயக்க, கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவர இருக்கும் படம், 'தேவராட்டம்'. இந்தப் படத்தின் டிரெய்லர், யூடியூபில் இன்று வெளியாகியிருக்கிறது. 

கௌதம் கார்த்திக் நடிக்கும் `தேவராட்டம்' டிரெய்லர்!

'கொம்பன்', 'குட்டிப்புலி', 'மருது', 'கொடிவீரன்' படங்களைத் தொடர்ந்து முத்தையா இயக்கியிருக்கும் படம், 'தேவராட்டம்'. 'மிஸ்டர். சந்திரமௌலி' படத்தைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் இதில் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறார். இவர்களைத் தவிர சூரி, சீரியல் நடிகர் முனீஸ்ராஜா போன்றவர்களும் நடித்திருக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு, நிவேஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். மேலும், கௌதம் கார்த்தி இப்படத்தில் 'நவரச இளவரசன்' என்ற பட்டத்தோடு நடிக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் டிரெய்லரை ஸ்டூடியோ கிரீன் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது.