Published:Updated:

முழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது!

அலாவுதின் ஹுசைன்
முழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' -  டிரெய்லர் வெளியானது!
முழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' - டிரெய்லர் வெளியானது!

முழுக்க முழுக்க சிஜி விலங்குகளுடன் காட்டில் எடுத்த `தும்பா' படத்தின் டிரெய்லர் ரிலீஸாகியுள்ளது.     

அறிமுக இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் `கனா' தர்ஷன் நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் படத்தில் நடிக்கின்றனர். இதுதவிர, `கலக்கப்போவது யாரு' தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. `தும்பா' என்ற பெண் புலி படத்தில் முக்கியமான கதாபாத்திரம் எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இதில்,  குரங்கு, யானை, மான், அணில், தவளைகள் என நிறைய விலங்குகள் இருப்பது குழந்தைகளை கவரும் வகையில் இருக்கிறது.