Published:Updated:

'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து சூர்யாவை இயக்கும் ஹிட் இயக்குநர் #surya39

அலாவுதின் ஹுசைன்
'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து சூர்யாவை இயக்கும் ஹிட் இயக்குநர் #surya39
'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து சூர்யாவை இயக்கும் ஹிட் இயக்குநர் #surya39

 சூர்யா தனது அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகளைக் கொடுத்து வருவதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் திளைத்து வருகின்றனர். இந்நிலையில் தனது அடுத்த படத்துக்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். 

இந்த வருடத்தின் பெரிய பிளாக் பஸ்டர்களில் ஒன்றான 'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சிவா ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.     

சிவா இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான 'சிறுத்தை' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யாவை இயக்குவார் சிவா என்கிற செய்தி வந்தது. ஆனால், சிவா அஜித்தை வைத்து 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' என பிஸியாகிவிட்டார். சூர்யாவும் அடுத்தடுத்த படங்களுக்குச் செல்ல. 'விஸ்வாசம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அஜித்துடன் இணையவிருக்கிறார் சிவா என்ற செய்திகளும் வந்தன.

அதற்கு முன், சிவகார்த்திகேயனை இயக்கவிருக்கிறார் என்ற செய்தியும் வந்தது. ஆனால், சூர்யாவை இயக்க இருக்கிறார் சிவா. இந்தப் படத்துக்கான ஷூட்டிங், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கிறது. அதற்குள், 'இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துவிட்டு, இந்தப் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, இயக்குநர் ஹரி இயக்கத்தில் ஒரு படம், கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவை வெயிட்டிங் லிஸ்டில் இருக்கின்றன.