Published:Updated:

`தர்பார்’ படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா - மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முருகதாஸ்

அலாவுதின் ஹுசைன்
`தர்பார்’ படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா - மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முருகதாஸ்
`தர்பார்’ படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா - மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முருகதாஸ்

நடிகை நயன்தாரா தர்பார் படப்பிடிப்பில் இன்று இணைந்துள்ளார். இது தொடர்பாக இயக்குநர் முருகதாஸ் ட்வீட் செய்திருக்கிறார். 

ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினி கூட்டணியில் தயாராகும் `தர்பார்' படத்தின் ஷுட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. ஏப்ரல் 10-ம் தேதி  தொடங்கிய படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினி, 18 -ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க சென்னை வந்து, வாக்களித்து 19-ம் தேதி மீண்டும் மும்பைக்குச் சென்றார். அடுத்த 6 மாதங்களுக்கு, தொடர்ந்து மும்பையிலேயே `தர்பார்' படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

இப்படத்தில் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. நயன்தாரா, மும்பையில் நடக்கும் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்துகொள்கிறார். 30 நாள்களுக்குமேல் தனது கால் ஷீட்டை நயன் இப்படத்துக்காக தந்துள்ளார் என்பது தகவல். ஏற்கெனவே 2005 -ல், 'கஜினி' படத்தில முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருக்கும் நயன், ரஜினியுடன் `சந்திரமுகி' படத்திலும் நடித்திருக்கிறார். இப்படி தமிழ் சினிமாவில் தன் ஆரம்பகாலத்தில் பணிபுரிந்தவர்களுடன் மீண்டும் இணைந்துள்ளார் நயன்தாரா.

14 நான்கு வருடங்களுக்குப் பிறகு நயன்தாராவை இயக்கவிருக்கும் முருகதாஸ், மீண்டும் இணைவதில் சந்தோஷமாகவுள்ளது என ட்வீட் செய்துள்ளார். இந்த பிரமாண்ட காம்போவில் உருவாகும் `தர்பார்' படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

அலாவுதின் ஹுசைன்