Published:Updated:

`என்னை ராசியில்லாத நடிகைன்னு ஏன் சொல்றாங்கன்னு தெரியல!' - ப்ரியா ஆனந்த் ஆதங்கம்

வே.கிருஷ்ணவேணி

`இங்கிலீஷ் விங்கிலீஷ்' ஶ்ரீதேவி, `எல்.கே.ஜி' ஜே.கே ரித்திஷ் என ப்ரியா ஆனந்த் நடித்த படங்களில் உள்ளவர்கள் இறந்து போகிறார்கள். இது ப்ரியா ஆனந்தின் பேட் லக்காக இருக்குமோ?' என ஆணழகன் என்பவர் ப்ரியா ஆனந்தை இணைத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். சமீபத்தில் வெளியான இந்த ட்விட்டர் பதிவிற்கு ப்ரியா ஆனந்த் கொந்தளித்து பதிலும் அளித்தார். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, 

`என்னை ராசியில்லாத நடிகைன்னு ஏன் சொல்றாங்கன்னு தெரியல!' - ப்ரியா ஆனந்த் ஆதங்கம்

``நான் பொதுவாகவே இது போன்ற பதிவுகளுக்கு பதிலளிக்க மாட்டேன். இன்னும் சொல்லப்போனால் சபை நாகரிகம் என்ன என்பதை மறந்து பல பேர் இப்படி ஒரு பதிவுகளைச் செய்கிறார்கள். இது வருத்தத்திற்குரிய ஒன்று. ஶ்ரீதேவி எவ்வளவு பெரிய நடிகை. எனக்கு தனிப்பட்ட முறையில் அவரை அவ்வளவு பிடிக்கும். திடீரென இறந்துவிட்டார். அவரது இறப்பிற்கும், நான் அவருடன் நடித்ததற்கும் என்ன சம்பந்தம். அதேபோல ஜே.கே.ரித்திஷ் போன்று ஒரு நல்லவரைப் பார்க்கவே முடியாது. எல்.கே.ஜி ஷூட்டின்போது அவருடன் எல்லோருமே நண்பர்களாகிட்டோம். இல்லை என்று சொல்லாதவர் அவர். பல பேருக்கு உதவியாக இருந்திருக்கிறார். பல பேரை வாழ வைத்திருக்கிறார். அவரை இழந்த துக்கத்திலிருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை. 

`என்னை ராசியில்லாத நடிகைன்னு ஏன் சொல்றாங்கன்னு தெரியல!' - ப்ரியா ஆனந்த் ஆதங்கம்

அவரது மனைவி கைக்குழந்தையை வைத்துக்கொண்டு ஈடு செய்ய முடியாத இழப்பின் வலியில் இருக்கிறார். அப்படியிருக்க, மறைந்த ஒருவரைப் பற்றி அவதூறாகச் சொல்வது மிக மிகக் கண்டிக்கத்தக்கது. தவறான செயலும் கூட. முக்கியமாக, சில வருடங்களுக்கு முன்பு என் நண்பர் ஒருவரை சாலை விபத்தில் இழந்தேன். அந்த வலியிலிருந்தே இன்னும் மீளவில்லை. அந்த துக்கம் எப்போதும் என் மனதிலேயே இருக்கிறது. இப்படி வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு இழப்பின் வலி இருக்கும். அதற்கு மரியாதை தரவேண்டும். அதுதான் மனிதப் பண்பாடு.'' என்றவர், 

`என்னை ராசியில்லாத நடிகைன்னு ஏன் சொல்றாங்கன்னு தெரியல!' - ப்ரியா ஆனந்த் ஆதங்கம்

`என்னை ராசியில்லாத நடிகை என்று எப்படிக் கூறுகிறார் என்றே தெரியவில்லை. நான் நடித்த படங்களான `எதிர்நீச்சல்' முதல் `எல்.கே.ஜி' வரை ஹிட் அடித்து கோடிக்கணக்கில் வசூல் செய்த படங்கள். என்னைப் பெரும்பாலும் `லக்கி சாம்' என்றே சொல்வார்கள். அதனால், ராசியில்லாத நடிகை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. என் திறமையை மட்டுமே நம்பி இந்தத் துறையில் இருக்கிறேன்' என்று முடித்துள்ளார் ப்ரியா ஆனந்த்.