Published:Updated:

``சரியான தருணம் வரும்போது நானே பதிவிடுகிறேன்; அதுவரை பொறுங்கள்!'' - பிரஜின் வேண்டுகோள்!

வே.கிருஷ்ணவேணி
``சரியான தருணம் வரும்போது நானே பதிவிடுகிறேன்; அதுவரை பொறுங்கள்!'' - பிரஜின் வேண்டுகோள்!
``சரியான தருணம் வரும்போது நானே பதிவிடுகிறேன்; அதுவரை பொறுங்கள்!'' - பிரஜின் வேண்டுகோள்!

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் `சின்னதம்பி' சீரியலில் நடித்து வருகிறார் பிரஜின். இவரின் மனைவி சாண்ட்ரா. நீண்ட வருடக் காத்திருப்புக்குப் பிறகு, அவர்களுக்கு சமீபத்தில், இரட்டைக் குழந்தைப் பிறந்துள்ளது. கடந்த மாத இறுதி வாரத்தில் குழந்தை பிறந்திருந்தது. ஆனால், இதுவரை இந்தத் தம்பதி எந்தவொரு குழந்தைகள் படத்தையும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யாமல் இருந்தார்கள். தற்போது, பிரஜின் தன் இரட்டைக் குழந்தைகளின் பாதங்களைப் படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்குப் பலரும் வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள். இந்தப் படத்தின் ஸ்பெஷல் குறித்து பிரஜினிடம் விசாரித்தேன்.

``கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகிடுச்சு. இதுவரை குழந்தைகளைப் படமும் எடுக்கவில்லை. ஷேர் செய்யவும் விருப்பம் இல்லை. கொஞ்ச நாள்கள் போகட்டும் என்றிருந்தேன். ஆனால், என் நட்பு வட்டாரம் தொடர்ந்து என்னைப் படத்தைப் பதிவிடும்படி கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அதனால்தான் எங்கள் குழந்தைகளின் பாதங்களில் பிரஜின்-சாண்ட்ரா மோதிரங்களை மாட்டிவிட்டு ஒரு படத்தை எடுத்து என் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டேன். எங்கள் குழந்தைகளின் படங்களைச் சரியான நேரம் வரும்போது நானே பதிவிடுகிறேன். அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்கவும். நாங்கள் பெற்றோர்களுக்கான கடமைகளைச் செய்து வருகிறோம்'' என்றார் பிரஜின்.

இந்தக் காதலர் தினம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், நான் அப்பாவாகவும், என் மனைவி அம்மாவாகவும் ஆகப்போகிறோம். எங்களுடைய பயணம் தொடங்கி 11 வருடங்கள் ஆகின்றன. தோழியாக, மனைவியாக, விமர்சகராக, தாயாக என் மனைவி இருந்திருக்கிறார். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அந்த வரம் எனக்கு அதிகமாகவே இருக்கு'  எனக் கடந்த காதலர் தினத்தன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.