Published:Updated:

``ரவுடி பேபி' சிங்கரின் அடுத்த ஹிட் பாடல் ரெடி!'- ஜி.வி.பிரகாஷ் சர்ப்ரைஸ் ட்வீட்

வே.கிருஷ்ணவேணி
``ரவுடி பேபி' சிங்கரின் அடுத்த ஹிட் பாடல் ரெடி!'- ஜி.வி.பிரகாஷ் சர்ப்ரைஸ் ட்வீட்
``ரவுடி பேபி' சிங்கரின் அடுத்த ஹிட் பாடல் ரெடி!'- ஜி.வி.பிரகாஷ் சர்ப்ரைஸ் ட்வீட்
``ரவுடி பேபி' சிங்கரின் அடுத்த ஹிட் பாடல் ரெடி!'- ஜி.வி.பிரகாஷ் சர்ப்ரைஸ் ட்வீட்

`ரவுடி பேபி' பாடல் பாடகி தீ (Dhee) பாடிய பாடலை `சூரரைப் போற்று' படத்துக்காக சற்றுமுன் ஒலிப்பதிவு செய்துள்ளதாகவும், மிகச் சிறப்பாக இந்தப் பாடல் வந்துள்ளதாகவும், இந்தப் பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

`இறுதிச்சுற்று' இயக்குநரான சுதா கொங்காரா இயக்கிவரும் படம் `சூரரைப் போற்று'. இது சூர்யா நடித்து வரும் 38-வது படமாகும். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. இந்தப் படத்துக்கு இசையமைத்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். `சூரரைப் போற்று' படத்தின் ஒவ்வொரு போஸ்டரும், செய்திகளும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் பாடகியாக இணைந்துள்ளார் தீ (Dhee). ரித்திகா சிங் நடித்த 'இறுதிச்சுற்று' படத்தின் `ஏ சண்டகாரா..' பாடலைப்பாடியவர் இவர். தற்போது `சூரரைப் போற்று' படத்திலும் பாடியிருக்கிறார். இந்தப் படத்தின் வெளியாகவிருக்கும் பாடல் கண்டிப்பாக ஹிட் அடிக்கும்' என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

``ரவுடி பேபி' சிங்கரின் அடுத்த ஹிட் பாடல் ரெடி!'- ஜி.வி.பிரகாஷ் சர்ப்ரைஸ் ட்வீட்

`மாரி 2' படத்தில் வெளியான `ரவுடி பேபி' பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான தீ (Dhee), இந்தப் படத்திலும் அப்படியொரு ஹிட் பாடலைப் பாடியிருக்கிறாராம். அந்தப் பாடல் விரைவில் வெளியாகும்' என்கிற தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். அவரின் ஃபாலோயர் ஒருவர், `ஆடுகளம்' படத்தில் இடம்பெற்ற `ஒத்த சொல்லால..' பாடல் போன்ற ஒரு பாடலை இந்தப் படத்தில் எதிர்பார்க்கலாமா? எனக் கேட்டதற்கு, `இருக்கு' எனப் பதிலளித்திருக்கிறார் ஜி.வி.பி. அப்போ மாஸ் பாடல்களை தீ ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்!!

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.