Published:Updated:

`உன்னால் வாழ்க்கை தொடங்கியிருக்கு, பேபிக்காக நன்றி பேபி'- `தோழா' நடிகைக்கு காதலர் நன்றி

வே.கிருஷ்ணவேணி

பாலிவுட்டின் குறிப்பிடத்தக்க ஹீரோவான அர்ஜூன் ராம்பாலின் போஸ்ட்தான் தற்போது பாலிவுட்டின் வைரல். `ஓம் ஷாந்தி ஓம்', `ராக் ஆன்', `டான்' போன்ற படங்களில் நடித்தவர். கடந்த வருடம் தன் மனைவி மெஹர் ஜெசியாவிடமிருந்து விவாகரத்து பெற்றார். இருபது வருடத்திற்கும் மேலாக வாழ்ந்த இந்தத் தம்பதியின் பிரிவு பாலிவுட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ராம்பால், ஜெசியாவிடமிருந்து பிரிந்த பிறகு, தென்னாப்பிரிக்க மாடலும் நடிகையுமான கேபரில்லாவை காதலிக்க ஆரம்பித்தார். 

`உன்னால் வாழ்க்கை தொடங்கியிருக்கு, பேபிக்காக நன்றி பேபி'- `தோழா' நடிகைக்கு காதலர் நன்றி

தற்போது அர்ஜூன் ராம்பால் தான் தந்தையாகப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ராம்பால் மற்றும் கேப்ரில்லா இருக்கும் படத்தை பதிவிட்டிருக்கிறார். அதில், `உன்னால் மீண்டும் ஒரு தொடக்கத்தை ஆரம்பித்திருக்கிறேன். இந்த பேபிக்காக நன்றி பேபி' என கேப்ரிலாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ராம்பால். 

`உன்னால் வாழ்க்கை தொடங்கியிருக்கு, பேபிக்காக நன்றி பேபி'- `தோழா' நடிகைக்கு காதலர் நன்றி

இந்த மாடல் மற்றும் நடிகை கேப்ரில்லா, நடிகர்கள் கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா, அனுஷ்கா போன்றோர் நடித்து 2016-ம் ஆண்டு வெளியான 'தோழா' படத்தில் ஒரு காட்சியில் நடித்திருப்பார். இந்தப் படத்தில் முதன் முதலாக நாகார்ஜுனாவும், கார்த்தியும் இணைந்து நடித்திருந்தார்கள். நாகார்ஜூனாவுக்கு உதவியாளராக வரும் கார்த்தி, ஒரு சகோதரர் போலப் பழகி நெருக்கமாவார். இறுதியில் நாகார்ஜுனாவின் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனைக்கான ஆளாக கார்த்தி இருப்பார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் 'தோழா' என்பது நாம் எல்லோரும் அறிந்ததாகும்.

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.