Published:Updated:

``இனி இரஞ்சித்தின் எல்லாப் படங்களையும் பாக்கணும்; சேர்ந்து பணியாற்றணும்!” - அனுராக் காஷ்யப்

அலாவுதின் ஹுசைன்
``இனி இரஞ்சித்தின் எல்லாப் படங்களையும் பாக்கணும்; சேர்ந்து பணியாற்றணும்!” - அனுராக் காஷ்யப்
``இனி இரஞ்சித்தின் எல்லாப் படங்களையும் பாக்கணும்; சேர்ந்து பணியாற்றணும்!” - அனுராக் காஷ்யப்

தேவ்-டி, கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், பாம்பே வெல்வெட் போன்ற பல படங்களை இயக்கியவர் அனுராக் காஷ்யப். படங்களை இயக்குவதோடு, பல நல்ல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். சென்ற ஆண்டு வெளிவந்த `இமைக்கா நொடிகள் ' படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். ஒரு கலைஞனாக எந்த மொழியில் நல்ல திரைப்படங்கள் வெளியானாலும், அதைப் பாராட்டுவது இவரது வழக்கம். இந்நிலையில் இயக்குநர் இரஞ்சித், அனுராக் சந்தித்துள்ளனர். 

``இனி இரஞ்சித்தின் எல்லாப் படங்களையும் பாக்கணும்; சேர்ந்து பணியாற்றணும்!” - அனுராக் காஷ்யப்

சமீபத்தில் `காலா' படத்தைப் பார்த்த இயக்குநர் அனுராக், மும்பையில் இயக்குநர் இரஞ்சித்தைச் சந்தித்து விருந்தளித்திருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ``காலா" திரைப்படம் குறித்தும் அப்படத்தின் அரசியல், தொழிற்நுட்ப நேர்த்தி ஆகியவை குறித்தும் விரிவாகப் பேசியுள்ளாராம். ``இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாகவும் பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்றும் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறாராம் அனுராக் காஷ்யப்.

``இனி இரஞ்சித்தின் எல்லாப் படங்களையும் பாக்கணும்; சேர்ந்து பணியாற்றணும்!” - அனுராக் காஷ்யப்

இந்தச் சந்திப்பு குறித்து தனது  ட்விட்டர் பக்கத்தில், ``உண்மையிலேயே உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. `காலா' உங்களுக்குப் பிடிச்சிருந்தது மகிழ்ச்சியாகவுள்ளது. இந்தப் பேச்சு வார்த்தைக்கும் உணவுக்கும் நன்றி" எனப்  பதிவிட்டுள்ளார் பா.இரஞ்சித்.

`` `காலா' படத்தை லேட்டா பார்த்தேன். ஆனா இப்போ இரஞ்சித்தோட எல்லாப் படங்களையும் பார்க்க ஆசையா இருக்கேன்" என்று அனுராக் பதிவிட்டுள்ளார்

``இனி இரஞ்சித்தின் எல்லாப் படங்களையும் பாக்கணும்; சேர்ந்து பணியாற்றணும்!” - அனுராக் காஷ்யப்

கூடிய விரைவில் அனுராக் உடன் இரஞ்சித் இணைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.