Published:Updated:

`இவற்றையெல்லாம் பேசி ஏன் புண்படுத்துறீங்கன்னு தெரியல!' - கண்கலங்கும் தொகுப்பாளினி மகேஸ்வரி

வே.கிருஷ்ணவேணி

'ஜி தமிழ்' சேனலில் 'பேட்டராப்' நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இருவருமே பல வருட தொகுப்பாளர் அனுபவம் கொண்டவர்கள். மகேஸ்வரி தற்போது தன் மகன் மற்றும் தன் தாய்வீட்டாருடன் வசித்து வருகிறார். அவரிடம் பேசியபோது, ''இந்தச் சமுதாயத்துல நமக்குப் பிடிச்ச மாதிரியான வாழ்க்கையை அமைச்சுக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்குங்க. எனக்கு மீடியா மீது ஆர்வம் இருந்ததால, ஆங்கரின், சீரியல் எனப் பிடித்த வேலையைப் பார்த்துட்டு இருக்கேன். ஆனால், ஆரம்பத்தில், 'மீடியாவுல இருக்கிற பொண்ணை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க'னு என் காதுபடவே பேசியிருக்காங்க. என்னதான் அதை நான் கண்டுக்காம இருந்தாலும், என் அம்மா, அப்பாவுக்கு கஷ்டமா இருக்கும்ல. அந்தப் பயத்தினாலேயே மீடியாவுக்குள்ள வந்த கொஞ்ச நாள்லயே கல்யாணம் பண்ணி வச்சாங்க. அப்போ அதைப் பற்றியப் புரிதல்கூட என்கிட்ட இல்லை. இருவருக்கும் மனப் பொருத்தம் இல்லை. சில வருடங்களிலேயே பிரிஞ்சுட்டோம். என் பையனை வளர்க்கிற பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன். அவருக்கு அப்பா, அம்மா என உலகமே நான்தான். எனக்கு அவர்தான்'' என்பவர், 

`இவற்றையெல்லாம் பேசி ஏன் புண்படுத்துறீங்கன்னு தெரியல!' - கண்கலங்கும் தொகுப்பாளினி மகேஸ்வரி

''அதேபோல, ஒரு நிகழ்ச்சியில் மேடையில் பேசும்போது 'நான் சிங்கிள் மாம்'னு சொன்னேன். மேடையிலிருந்து கீழே இறங்கி வந்ததும் ஒரு பெண், 'என்ன நீங்க சிங்கிள் மாம்'னு மேடையில பேசுறீங்க. அப்படி உங்க அடையாளத்தை வெளிப்படுத்துறது தப்புனு தோணலயா?'னு கேட்டாங்க. 'இதுல என்னங்க தப்பு. நான் எப்படி இருக்கிறேனோ அதைப் பெருமையோடு சொல்றேன். என்னைப் பெருமைப்பட பேச வேண்டாம். அதே நேரம், இறக்கியும் பேச வேண்டாம். நீங்களே எங்களைப் போன்றவர்களுக்கு சப்போர்ட் செய்யலைனா எப்படி?'னு கேட்டுட்டு கடகடவென நடந்து வந்துட்டேன். 

`இவற்றையெல்லாம் பேசி ஏன் புண்படுத்துறீங்கன்னு தெரியல!' - கண்கலங்கும் தொகுப்பாளினி மகேஸ்வரி

ஒரு பொண்ணு இந்தச் சமூகத்தில் தனியா வாழ்றது எவ்வளவு கஷ்டம் என்பது என்னைப் போன்ற பெண்களுக்குத்தான் தெரியும். நாங்களும் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தாம். எங்களுக்குள்ளும் மனசு இருக்கு. அதை மத்தவங்க புரிஞ்சுக்கணும் என்பதுதான் என் போன்றவர்களின் முக்கிய தேவையாக இருக்கு. அதேபோல உடல்பருமன், வயது இவற்றையெல்லாம் பேசிப் பேசி ஏன் புண்படுத்துறீங்கன்னு தெரியல. பெண்களுக்குள் இருக்கும் பிரச்னைகள் ஆயிரமாயிரம். அவற்றைத்தாண்டித்தான் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஓடுகிறோம்'' என்றார் உறுதியாக மகேஸ்வரி. 

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.
பிரியங்கா.ப