Published:Updated:

இந்தியில் ரீமேக் ஆகும் தியாகராஜனின் `சூப்பர் டீலக்ஸ்'

சனா
இந்தியில் ரீமேக் ஆகும் தியாகராஜனின் `சூப்பர் டீலக்ஸ்'
இந்தியில் ரீமேக் ஆகும் தியாகராஜனின் `சூப்பர் டீலக்ஸ்'

விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் `சூப்பர் டீலக்ஸ்'. `ஆரண்யம் காண்டம்' படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்த இந்தப் படம் தமிழில் பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றது. இவர் தன்னுடைய முதல் படம் எடுத்து எட்டு வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை எடுத்திருந்தார். இருந்தும், இயக்குநரின் திரைக்கதை வடிவம் வித்தியாசமாக இருக்கும் என்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக காணப்பட்டது. மேலும், இந்தப் படத்தை தியாகராஜனே தமிழில் தயாரித்தும் இருந்தார். மேலும், படத்துக்கு சென்சார் அமைப்பு 'A' சான்றிதழ் அளித்திருந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் ரிலீஸான உடனே வைரல் ஆனது. 

யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு நலன், நீலன், மிஷ்கின் என மூன்று பேர் கதை எழுதியிருந்தனர். இந்நிலையில் இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறதாம். தமிழில் இந்தப் படத்தை எடுத்திருந்த தியாகராஜனே இந்தியிலும் இயக்க இருக்கிறார். இந்தியில் முக்கிய தயாரிப்பு நிறுவனத்துடன் இதற்காக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். முன்னதாக, தமிழில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் அனுராக் காஷ்யப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விரைவில் இந்தி ரீமேக் படத்தில் நடிக்கும் முன்னணி பாலிவுட் ஹீரோக்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகுமாம்.

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..