Published:Updated:

`இந்த மூஞ்சியை கூர்கானு சொன்னா யாராவது நம்புவாங்களா?!' - யோகிபாபுவின் `கூர்கா' டீசர்

சனா
`இந்த மூஞ்சியை கூர்கானு சொன்னா யாராவது நம்புவாங்களா?!' - யோகிபாபுவின் `கூர்கா' டீசர்
`இந்த மூஞ்சியை கூர்கானு சொன்னா யாராவது நம்புவாங்களா?!' - யோகிபாபுவின் `கூர்கா' டீசர்

`டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கியவர், சாம் ஆன்டன். தற்போது யோகி பாபுவை வைத்து 'கூர்கா' படத்தை முடித்திருக்கிறார். யோகி பாபு `கூர்கா' கேரக்டரில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் கனடாவைச் சேர்ந்த எலிஸா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

ஆன்ந்த் ராஜ், லிவிங்ஸ்டன் மற்றும் மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் இன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இணையத்தில் நடிகர் தனுஷ் டீசரை வெளியிட்டார். இதற்கு முன்னதாக படத்தின் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

படம் குறித்துப் பேசிய இயக்குநர் சாம் ஆண்டன்,``ஜாலியா ஒரு படம் பண்றதுதான் ஐடியா. இந்தப் படத்துல லீடு ரோல்னு யாரும் கிடையாது. படத்துல ஒரு நாய்க்கு முக்கியமான ரோல். கனடா மாடல் அழகி, சார்லி சார், மயில்சாமி அண்ணா, ஆனந்த் ராஜ் சார், மனோபாலா சார், தேவதர்ஷினி மேடம், ரவி மரியா, ராஜ் பரத்... இப்படிப் பெரிய பட்டாளமே இருக்கு. ஒரு மால்ல பலபேர் பணயக் கைதிகளா மாட்டிக்கிற சூழல்ல, இத்தனை காமெடி நடிகர்கள் இருந்தா எப்படி இருக்கும்... அதுதான் படத்தின் களம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.