Published:Updated:

"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்!"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்!"
"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்!"

இப்படத்தைப் போலவே இன்னொரு படத்தை 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கச் சொல்லி, லாரன்ஸுக்குச் சொல்லியிருக்கிறார்கள். ஏற்கெனவே பிரமாண்டமான முறையில் படமாக்க பாம்பு கதை ஒன்றை லாரன்ஸ் உருவாக்கி, தயாராக வைத்திருக்கிறார்.

ற்கெனவே வெளிவந்த 'காஞ்சனா' படத்தின் இரண்டு பாகங்களும் குட்டீஸ் மத்தியிலும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த இரண்டு படங்களின் ரெக்கார்டை உடைக்கும் அளவுக்குக் 'காஞ்சனா 3' வரவேற்பைப் பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. விமர்சன ரீதியாகக் கொண்டாட விஷயமில்லை என்றாலும், வசூலில் சாதனை படைக்கிறது இப்படம். தமிழ் சினிமா உலகில் தற்போது ராகவா லாரன்ஸின் மார்க்கெட் உச்சத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. ஒருமுறை படமாக்கிய காட்சியை எடிட்செய்து பார்க்கும்போது, மனதுக்குப் பிடிக்கவில்லை என்றால் நினைத்த மாதிரி அமையும்வரை திரும்பத் திரும்ப ஷூட் செய்வது, லாரன்ஸின் வழக்கம். இவரது படத்தில் நடிப்பது என்றால், வேறு இயக்குநர்களின் படங்களுக்குத் தரும் தேதிகளைவிட அதிகமான தேதியை ஒதுக்க வேண்டி இருப்பதால், நயன்தாரா, அனுஷ்கா போன்ற முன்னணி நடிகைகள் பலர் லாரன்ஸ் படங்களை நாசூக்காகத் தவிர்த்து வருகிறார்கள்.

தவிர, லாரன்ஸின் சினிமா ஃபார்முலா அக்மார்க் தெலுங்கு சினிமா ஸ்டைல். 'ஆண்களைப் பார்த்தால் அடிக்கணும் பெண்களை பார்த்தால் டான்ஸ் ஆடணும்' என்கிற தெலுங்கு சினிமாவின் ஒப்பற்ற தத்துவத்தைத் தனது ஒவ்வொரு படத்திலும் தவறாமல் கடைப்பிடித்து வருகிறார். 'காஞ்சனா 3' படத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகள் யாரும் நடிக்கவில்லை. சினிமாவில் மார்க்கெட் இழந்து 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியா, தனது கைவசம் ஒருபடம்கூட இல்லாத வேதிகா, இதுவரை தமிழ்ப் படங்களிலேயே தலையைக் காட்டாமல், தெலுங்கில் ஒரு படத்தில் மட்டும் நடித்த நடிகை நிகிதம்போளி ஆகியோரை வைத்துக்கொண்டு மெகா ஹிட் படத்தைக் கொடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்

ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஓவர்சீஸ் தவிர்த்து, தமிழ்நாட்டின் ஷேர் மட்டுமே 55 கோடி ரூபாய் வரும் என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள் படத்தை வாங்கியவர்கள். 'காஞ்சனா 3' படத்தின் வெற்றியை ருசித்து முடிக்கும் முன்பே, 'காஞ்சனா' முதல் பாகத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மும்பைக்குப் பறந்துவிட்டார் ராகவா லாரன்ஸ். பிரபல இந்தி நடிகர் ஜிதேந்திராவின் மகன் துஷார் கபூர் தயாரிக்கும் இப்படத்தில், தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த வேடத்தில் நடிக்கிறார் அக்‌ஷய் குமார். சரத்குமார் நடித்த திருநங்கை வேடத்தில் நடிப்பதற்கு அமிதாப்பச்சனிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். கதாநாயகியாக கீரா அத்வானி நடிக்கிறார். 'சிறுத்தை' சிவாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வெற்றி 'காஞ்சனா 3' படத்தில் பணியாற்றினார். அவரது கேமரா நேர்த்தி லாரன்ஸுக்குப் பிடித்துப்போகவே இப்போது இந்தியில் ரீமேக் ஆகும் 'காஞ்சனா'வுக்கும் வெற்றியையே ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஓவர்சீஸ் என எல்லா இடங்களிலும் 'காஞ்சனா 3' வசூலை வாரி இறைத்துக்கொண்டிருப்பதால், சந்தோஷத்தில் இருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 

இப்படத்தைப் போலவே இன்னொரு படத்தை 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கச் சொல்லி, லாரன்ஸுக்குச் சொல்லியிருக்கிறார்கள். ஏற்கெனவே பிரமாண்டமான முறையில் படமாக்க பாம்பு கதை ஒன்றை லாரன்ஸ் உருவாக்கி, தயாராக வைத்திருக்கிறார். இதையே சன் பிக்சர்ஸுக்கு 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கித் தரும் ஐடியாவில் இருக்கிறார். தவிர, அந்தப் படத்துக்கு 'கால பைரவா' என்று டைட்டில் வைத்திருக்கிறார் லாரன்ஸ். '3டி-யில் உருவாகும் இந்தப் படத்தின் பட்ஜெட் பற்றி கவலையே வேண்டாம். படம் பிரமாண்டமா வரணும்; அவ்வளவுதான்' என சன் பிக்சர்ஸ் நிறுவனம் உற்சாகமாகச் சொல்ல, இந்தி ரீமேக் 'காஞ்சனா'வை முடித்துக் கொடுத்துவிட்டு, 3டி-யில் உருவாகவிருக்கும் 'கால பைரவா'வைக் கையிலெடுக்கவிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு