Published:Updated:

``இப்போ சொல்லி என்ன ஆகப்போகுது.. அந்தப் படத்துல நான் ஏமாந்தேன்!" - `நண்பன்' தேவி

`நண்பன்' படத்திலும் சரி, அதற்குப் பிறகு அவருக்குத் தமிழ் சினிமாவில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் சரி, தேவியின் தோற்றத்தையும், உடல் நிறத்தையும் கேலி செய்வது போன்ற பாத்திரங்கள்தாம் இதுவரை இயக்குநர்கள் அவருக்கு அளித்திருக்கிறார்கள்.

``இப்போ சொல்லி என்ன ஆகப்போகுது.. அந்தப் படத்துல நான் ஏமாந்தேன்!" - `நண்பன்' தேவி
``இப்போ சொல்லி என்ன ஆகப்போகுது.. அந்தப் படத்துல நான் ஏமாந்தேன்!" - `நண்பன்' தேவி

`நண்பன்' படத்தில், சேவற்கொடி செந்தில் (ஜீவா) வீட்டில் இடம்பெறும் ஒரு காட்சி. செந்திலின் அக்கா அவனுடைய இரு நண்பர்களுக்கும், `கொஞ்சம் தக்காளிச் சட்னி வைக்கட்டுமா?' எனக் கேட்டு கரண்டியை நீட்டுவார். அதுபோன்ற ஒரு கரண்டி அளவு வசனம்தான் அந்த கேரக்டரில் நடித்த மேடை நாடக நடிகை தேவிக்கு தமிழ் சினிமாவில் வாய்த்தது. படத்தின் பிற்பகுதியில் வரும் ஒரு காட்சியில், தேவியின் உடல் தோற்றத்தைக் கேலி செய்வதுபோன்ற காட்சிகளும் இடம்பெறும்.

`நண்பன்' படத்திலும் சரி, அதற்குப் பிறகு அவருக்குத் தமிழ் சினிமாவில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் சரி, தேவியின் தோற்றத்தையும், உடல் நிறத்தையும் கேலி செய்வது போன்ற பாத்திரங்கள்தாம் இதுவரை இயக்குநர்கள் அவருக்கு அளித்தனர்.

``இப்போ சொல்லி என்ன ஆகப்போகுது.. அந்தப் படத்துல நான் ஏமாந்தேன்!" - `நண்பன்' தேவி

``அழகுங்கிறது வெறும் வெள்ளைத் தோல்ல மட்டும்தான் இருக்குன்னு கோடம்பாக்கத்துல எல்லோரும் நம்புறாங்க" எனச் சலிப்புடன் கூறினார், தேவி. ``இப்போ நான் ஒரு கம்ப்ளீட் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். நடிக்கிறதுதானே வேலை. அது மேடையா இருந்தா என்ன, திரையா இருந்தா என்ன?!" என இயல்பாக தன் மீது இருக்கும் கண்ணோட்டத்தைத் தட்டிவிட்டுச் செல்கிறார்.

``ஆமா. நான் என் பயணத்தைத் தொடங்குனதே மேடை நாடகங்கள்ல இருந்துதான். முதல்ல கூத்துப் பட்டறையில இருந்து நடிப்பு உட்பட நாடகக்கலையை மொத்தமா கத்துக்கிட்டுதான் வந்தேன். சினிமா எனக்கு இலக்கு இல்லை. ஆனா, நல்ல கேரக்டர்கள் வந்தா சினிமாவா இருந்தாலும் பரவாயில்ல, நடிக்கத் தயாராதான் இருக்கேன்." என்றவர், ``நல்ல கேரக்டரா இருந்தா" என்பதை மீண்டும் அழுத்திச் சொல்கிறார்.

தொடர்ந்து பேசியவர், ``கடந்த பத்து வருடத்துல, என் நடிப்புப் பள்ளியிலேயே இதுவரை 500-க்கும் அதிகமான கலைஞர்களை உருவாக்கியிருக்கேன். இதுதான் நான் ஆசைப்படுறது. அது நிறைவேறி வருது. இதுக்குமேல எனக்கு என்ன வேணும்?!

``இப்போ சொல்லி என்ன ஆகப்போகுது.. அந்தப் படத்துல நான் ஏமாந்தேன்!" - `நண்பன்' தேவி

`நண்பனு'க்குப் பிறகு நான் நிறைய தமிழ்ப் படங்கள்ல வேலை பார்த்திருக்கேன். `கடல்' படத்துல நடிச்ச பல ஆர்ட்டிஸ்ட்டுக்கு நான்தான் நடிப்புக்கு ட்ரெயினிங் கொடுத்தேன். அந்தப் படத்துல கெளதம் கார்த்திக் கேரக்டருக்கு அம்மாவா ஒரு சீன்ல நான் வருவேன். இதுமாதிரி பல படங்களுக்கு நான் ஆக்டிங்-ட்ரெயினரா இருந்திருக்கேன். இதுல நிறைய ஏமாந்தும் இருக்கேன்." என்றவரிடம், `அப்படியென்ன ஏமாற்றம்?' என்றேன்.

``இதை இப்போ சொல்லி என்ன ஆகப்போகுதுன்னு தெரியல. ஆனாலும் சொல்றேன். விஜய் நடிச்ச `புலி' படத்துல இதேமாதிரி பயிற்சி கொடுக்கப் போனேன். அதுக்காக சில வீடியோ ஃபுட்டேஜும் அனுப்பினேன். அதையெல்லாம் வாங்கிக்கிட்டு அந்தப் படத்தோட டைரக்டர் சிம்புதேவன் இப்போவரைக்கும் எனக்கு எந்த பேமென்ட்டும் தரல. தவிர, படத்திலும் எனக்கு கிரெடிட் கொடுக்கல. எனக்கு அந்தப் படம் வந்த சமயத்துல பெருசா வாய்ஸ் இல்லை. நான் சொன்னா யாரும் கேட்கவும் போறதில்லை, அதான் அதைப் பத்தி எங்கேயுமே பேசல. அதேசமயம் பல இயக்குநர்கள், நடிகர்கள் என்கூட நல்ல நட்பில் இருக்காங்க. நாங்க சாலிகிராமத்துல அடிக்கடி நாடகம் போடுவோம். அப்போ பலரும் பார்க்க வருவாங்க. ஒருமுறை விஜய் சேதுபதி என்னோட நாடகத்தைக் கூட்டத்தோடு கூட்டமா நின்னு பார்த்தார். கூத்துப் பட்டறை காலத்துல இருந்தே எங்களுக்குள்ள நல்ல நட்பு." என்றவர், தொடர்ந்தார்.

``ஆனா, இப்படியே இருக்கணும்னு எல்லாம் ஆசை கிடையாது. நாங்க ரொம்பச் சின்ன நாடகக் குழு. எல்லா வேலைகளையும் எங்களுக்குள்ள பிரிச்சுக்கிட்டு வேலை செய்யணும். இனி இதைக் கொஞ்சம் ஒருங்கிணைக்கணும். பெரிய குழுவா மாறணும். நிறைய நடிகர்களை உருவாக்கணும். சொந்தமா ஒரு அரங்கம் உருவாக்கி, அங்கே எல்லா நாடகத்தையும் நடத்தணும்." என்கிறார், தேவி. 

``இப்போ சொல்லி என்ன ஆகப்போகுது.. அந்தப் படத்துல நான் ஏமாந்தேன்!" - `நண்பன்' தேவி

``அப்போ, சினிமா?"

``தமிழ் சினிமா இன்னும் ஒரு பெரிய பரிணாம வளர்ச்சியை அடையணும். மலையாள சினிமாவை உதாரணமா எடுத்துக்கோங்க. அங்கே எல்லோரும் ஒரு கதாபாத்திரம் இருக்குதுன்னா, அதுக்கு என்ன தேவையே அதைத்தான் பண்ணுவாங்க. இங்கே நாம நல்ல நடிகர்கள்னு சொல்றவங்ககூட, எந்த கேரக்டரா இருந்தாலும், அதை அவங்க பாணிக்குள்ளே புகுத்தி, நடிப்புன்னா என்னன்னு தெரியாம நடிக்கிறாங்க. அதுக்குக் காரணம், சினிமாவுக்கான கவர்ச்சி எல்லாம் கதை, பர்ஃபாமன்ஸ் இதையெல்லாம் நம்பி இல்லாம, யாரு நடிக்கிறாங்க, அவங்க எவ்வளவு அழகா இருக்காங்கன்னு பார்க்கிறதுலதான் இருக்கு. இந்த நிலை மாறும்வரை என்னைமாதிரி ஆளுங்களுக்குத் திரைக்கு முன்னால வேலை கம்மியாத்தான் இருக்கும். அப்படி ஒரு காலம் வந்தா, கண்டிப்பா பல படங்கள்ல நடிப்பேன்." 

ஒருபுறம், தமிழ் சினிமாவை உலக சினிமாவாக்கப் போகிறேன் என இயக்குநர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பியிருந்தாலும், மறுமுனையில், அவர்களால் இப்படிப் பல தேவிக்கள் காணாமலும் ஆக்கப்படுகிறார்கள் என்பது தேவியுடனான உரையாடல் உணர்த்தியது.