Published:Updated:

சமுத்திரக்கனி - சசிகுமார் இணையும் 'எண்' கொண்ட புதிய படம்! - என்ன ஸ்பெஷல்?

வே.கிருஷ்ணவேணி

நடிகர் சமுத்திரக்கனியின் பிறந்தநாளான இன்று, தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் சசிகுமார், சமுத்திரக்கனி இருவரும் இணைகிறார்கள். 

“நாடோடிகள், சுப்ரமணியபுரம்” படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமான இவர், சில காலம் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்தவர். 'சாட்டை' போன்ற சமூக பொறுப்புள்ள படங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் சமுத்திரக்கனி. இப்போது சசிகுமாருடன் இணைந்து நடிக்கும் இந்தப் படத்திலும் நட்பு பற்றிய கதையை எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.

சமுத்திரக்கனி - சசிகுமார் இணையும் 'எண்' கொண்ட புதிய படம்! - என்ன ஸ்பெஷல்?

சமுத்திரக்கனி பதிவிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், படத்தின் பெயர் 'புரொடக்‌ஷன் #5' (production #5) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. `நாடோடிகள் 2'-ல் நடித்து வரும் அஞ்சலி மற்றும் அதுல்யா இருவரும் மீண்டும் இணைகிறார்கள். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட 'நாடோடிகள் 2' பட டீம்தான் இதிலும் இணைகிறது. 'வெல்வோம்' எனக் குறிப்பிட்டுள்ளார் சமுத்திரக்கனி.

இதற்கு, அதுல்யா ரவி. 'பிறந்த நாளன்று புதிய படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள். அதுவே எங்களுக்குப் பிறந்தநாள் பரிசாக இருக்கிறது' எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி, சசிகுமார், சமுத்திரக்கனி போன்றோரை இணைத்துப் பதிவிட்டுள்ளார்.  

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.