Published:Updated:

``இதுக்கு மருந்தும் இல்லை, மருத்துவமும் இல்லை!" - மிரட்டும் `வைரஸ்’ டிரெய்லர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``இதுக்கு மருந்தும் இல்லை, மருத்துவமும் இல்லை!" - மிரட்டும் `வைரஸ்’ டிரெய்லர்
``இதுக்கு மருந்தும் இல்லை, மருத்துவமும் இல்லை!" - மிரட்டும் `வைரஸ்’ டிரெய்லர்

``இதுக்கு மருந்தும் இல்லை, மருத்துவமும் இல்லை!" - மிரட்டும் `வைரஸ்’ டிரெய்லர்

மலையாளத்தில் ஹிட் ஆன 'மாயாநதி' படத்தின் இயக்குநர் ஆஷிக் அபு இயக்கியுள்ள `வைரஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது.

கேரளாவில், பலரையும் பாதித்த நிபா வைரஸ் பரவியபோது நடந்த உண்மை நிகழ்வுகளை மையமாகக்கொண்டு ஆஷிக் அபு இயக்கியுள்ள வைரஸ் படத்தில் ரஹ்மான், பார்வதி திருவொத்து, குஞ்சக்கோ போபன், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாறன், ஆசிஃப் அலி, சௌபின் ஷஹிர், பூர்ணிமா இந்திரஜித், ரம்யா நம்பீசன், மடோனா செபாஸ்டியன், ஜோஜு, திலீஷ் போத்தான் உள்ளிட்ட நடிகர்கள் பட்டாளமே இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது .

பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் போன்று, கடந்த வருடம் கேரளாவை ஆட்டிவைத்த வைரஸ், நிபா. வௌவால்களால் பரவும் இந்த வைரஸுக்கு, கடந்த வருடம் 10-க்கும் மேற்பட்டோர் கேரளாவில் உயிரிழந்ததோடு, பலரும் இதனால் பாதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஆஷிக் அபு இயக்குவதோடு தன் மனைவியும் நடிகையுமான ரீமா கல்லிங்களுடன் இணைந்து தயாரிக்கிறார். `வைரஸ்'. படத்தில், நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜீவ் ரவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். படம் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு