Published:Updated:

``நீங்க, எப்படி நிஷா படத்தை அங்கே ஷேர் செய்யலாம்!''- ரசிகருக்கு ரியாஸ் கேள்வி

விஜய் டி.வியின் மறக்க முடியாத ஒரு முகமாகியிருப்பவர் அறந்தாங்கி நிஷா. `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலமாக ஸ்டேன்டப் காமெடியனாக அறிமுகமானவர் அதன்பிறகு, பல நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். 

அதன் பிறகு, `ஆண் தேவதை', `மாரி 2' போன்ற படங்களிலும் நடித்துப் பிரபலமானார். நகைச்சுவையாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடிகை என பன்முகம் கொண்டவர் நிஷா. தற்போது, ராமர் மற்றும் நிஷா இணைந்து `ராமர் வீடு' என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்கள். அரசு ஊழியரான அவரின் கணவர் ரியாஸ் இப்போது 'Mr&Mrs. சின்னத்திரை' நிகழ்ச்சியில் நிஷாவோடு இணைந்து போட்டிகளிலும் கலந்து கலக்கி வருகிறார். இதுவல்ல விஷயம்.. `நாங்கள் ஷேர் செய்யாத ஒரு இடத்தில் எப்படி எங்கள் படங்களை ஷேர் செய்யலாம் என்பதுதான் தற்போது இவர்களின் பிரச்னை. 

``நீங்க,  எப்படி நிஷா படத்தை அங்கே ஷேர் செய்யலாம்!''- ரசிகருக்கு ரியாஸ் கேள்வி

சமீபத்தில் ஜீவா, சதீஷ் லேடி கெட்டப்பில் இருக்கும் படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதை சதீஷ் என பலரும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டார்கள். அதேபோல, நேற்று ட்விட்டரில் ஒருவர் நிஷாவின் பாதி முகம் தெரியும்படியான ஒரு படத்தை வெளியிட்டு, `என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பெயரும் என்னடி..' என்கிற பாடலைக் குறிப்பிட்டு ஷேர் செய்திருந்தார். இந்த விஷயம் அறிந்த ரியாஸ், 

``நீங்க,  எப்படி நிஷா படத்தை அங்கே ஷேர் செய்யலாம்!''- ரசிகருக்கு ரியாஸ் கேள்வி

``அது அநேகமாக டிக் டாக்கில் நிஷா பேசியதாக இருக்கும். நாங்கள் இருவரும் ஃபேஸ்புக் தவிர வேறு எந்த சமூக வலைதள அக்கவுண்டிலும் இல்லை. அப்படியிருக்கும்போது ட்விட்டரில் நிஷா படத்தை எப்படி ஷேர் செய்யலாம். நாங்கள் ட்விட்டரில் இருந்து அதை பதிவிட்டிருந்தால், ஷேர் செய்திருக்கலாம். நாங்கள் இல்லாத இடத்தில் எங்கள் படத்தை ஷேர் செய்வது தவறு'' என்றவர், நிஷா இப்போது தன் அம்மா மற்றும் மகனுடன் மெக்காவுக்கு பதினைந்து நாள் பயணமாக சென்றிருக்கிறார். அவருடைய ஷெட்யூலை நான்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் ஆக்டிவாக இல்லாத நேரத்தில் இப்படி பதிவிட்டிருப்பது வருத்தமாக இருக்கிறது. நாளை வேறு படத்தைப் பகிர்ந்தால் எப்படி எங்கள் கவனத்துக்கு வரும்'' என்று வருத்தப்பட்டார் ரியாஸ்.