Published:Updated:

`விஷால் விளக்கம் திருப்தியில்லை!'- தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க அதிகாரியை நியமித்தது அரசு

`விஷால் விளக்கம் திருப்தியில்லை!'- தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க அதிகாரியை நியமித்தது அரசு
`விஷால் விளக்கம் திருப்தியில்லை!'- தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க அதிகாரியை நியமித்தது அரசு

சங்கங்களின் பதிவாளர் அலுவலக சட்டத்தின் (சொசைட்டீஸ் ரெஜிஸ்ட்ரேஷன் ஆக்ட்) கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது, விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காதது, கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பராமரிக்காதது உள்ளிட்ட புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, விஷால் தலைமையிலான நிர்வாகத்தைக் கலைத்து சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.

இதுகுறித்து பதிவுத்துறை வட்டாரத்தில் பேசியபோது, `தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கலான வழக்குகளின் அடிப்படையில், சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் ஆய்வு செய்தது. அப்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அதன் விதிமுறைகளுக்குள்ளும், சொசைட்டீஸ் ரெஜிஸ்ட்ரேஷன் சட்டப்படியும் நடக்கலைங்கிறது மற்றும் சங்க கணக்கு வழக்குகள் முறைப்படி கையாளப்படலைங்கிறது தெரியவந்தது. மேற்படி விவரங்கள் அறிக்கையா தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசு அந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டி விஷால் தலைமையிலான நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. பதில் தர முப்பது நாள் அவகாசமும் தரப்பட்டது.

விஷால் தலைமையிலான நிர்வாகக் குழு தந்த விளக்கம் ஏற்கத்தக்கதாக இல்லைங்கிறதால இப்ப அரசாங்கத்துல இருந்து மாவட்டப் பதிவாளர் அந்தஸ்துல இருக்கிற சேகர்ங்கிற சிறப்பு அதிகாரியை நியமிச்சிருக்காங்க. இனி அந்த அதிகாரி மேற்பார்வையிலதான் சங்கத்தின் அத்தனை செயல்பாடுகளும் இருக்கும்’' என்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் தேதியுடன் விஷால் தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.