Published:Updated:

`எதை வைத்து எனக்கு அப்படி ஒரு ரோல் கொடுக்கிறாங்கன்னு தெரியல!'- காயத்ரி யுவராஜ்

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் 'அரண்மனைக் கிளி' சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். கடந்த வருடம் நடந்து முடிந்த `ஜோடி' டான்ஸ் நிகழ்ச்சியில் காயத்ரி யுவராஜ் ஆடவேண்டியிருந்தது. அதற்கான ரிகர்சல் முடித்து வீட்டுக்கு தன்னுடைய ஸ்கூட்டியில் செல்லும்போது அடிபட்டு கை முறிந்தது. இதனால் `ஜோடி' நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் இருந்தது. இதை அவரது கணவர் யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால், ஓய்வில் இருந்த காயத்ரி சில மாதங்களிலேயே தான் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருந்த `அரண்மனைக் கிளி' சீரியலில் நடித்து வந்தார். தற்போது சன் டி.வியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதுசீரியல் ஒன்றில் கமிட் ஆகவிருக்கிறாராம்.

`எதை வைத்து எனக்கு அப்படி ஒரு ரோல் கொடுக்கிறாங்கன்னு தெரியல!'- காயத்ரி யுவராஜ்

இது குறித்து அவரிடம் கேட்டபோது, ``சன் டி.வியில் ஒளிபரப்பாகவிருக்கும் புது சீரியலிலும் எனக்கு நெகட்டிவ் ரோல்தான். `சரவணன் மீனாட்சி', `அரண்மனைக் கிளி' போன்ற சீரியல்களில் எனக்கு நெகட்டிவ் ரோல்தான். இப்போ கமிட் ஆகவிருக்கும் ரோலும் நெகட்டிவ் ரோல்தான். எதை வைத்து எனக்கு அப்படி ஒரு ரோல் கொடுக்கிறார்களோ தெரியல. எது எப்படி இருந்தாலும், கொடுத்த வேலையை சரியாகச் செய்யணும் என்பதில் தீவிரமாக இருப்பேன். மீண்டும் அப்படித்தான் பார்க்கப் போகிறீர்கள்'' என்றவரிடம் விபத்து நடந்து சில மாதங்கள் ஆகிறது முற்றிலும் குணமடைந்துவிட்டீர்களா எனக் கேட்டதற்கு, 

`எதை வைத்து எனக்கு அப்படி ஒரு ரோல் கொடுக்கிறாங்கன்னு தெரியல!'- காயத்ரி யுவராஜ்

``இன்னும் இல்லை. விபத்தின்போது கை எலும்பு உடைஞ்சிடுச்சு. அதனால இரண்டு பிளேட் வச்சிருக்காங்க. வலி இன்னும் முற்றிலுமாக குறையவில்லை. இருந்தும் சமாளிச்சுட்டுத்தான் அடுத்தடுத்த வேலைகளில் தீவிரமா இருக்கேன். படங்களில் நல்ல வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிக்கலாம் என்கிற முடிவில் இருக்கேன்'' என்றார் காயத்ரி.