Published:Updated:

"குழந்தைகிட்ட கவிதை வாசிக்கிறதுதான் ட்ரம்ப் கார்ட்... ஆனா...?" மிர்ச்சி சிவாவின் சென்னை-28 ரகசியம் #12YearsOfChennai28

சனா

'சென்னை 28' திரைப்படம் ரிலீஸாகி 12 வருடம் ஆகிறது. இப்படத்தில் நடித்தபோது நிகழ்ந்த சுவாரஸ்யமான அனுபவங்களைச் சொல்கிறார் மிர்ச்சி சிவா.

"குழந்தைகிட்ட கவிதை வாசிக்கிறதுதான் ட்ரம்ப் கார்ட்... ஆனா...?"  மிர்ச்சி சிவாவின் சென்னை-28 ரகசியம் #12YearsOfChennai28
"குழந்தைகிட்ட கவிதை வாசிக்கிறதுதான் ட்ரம்ப் கார்ட்... ஆனா...?" மிர்ச்சி சிவாவின் சென்னை-28 ரகசியம் #12YearsOfChennai28

வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான திரைப்படம் 'சென்னை 28.' மிர்ச்சி சிவா, வைபவ், பிரேம்ஜி, ஜெய் எனப் பலரும் இப்படத்தின் மூலம் ஃபேமஸ் ஆனார்கள். இயக்குநர் அகத்தியன் மகள் விஜயலட்சுமி இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்களும் அதிரி புதிரி ஹிட் அடித்தது. ஏரியாவில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களின் ஃபேவரைட் படமாக மாறிய 'சென்னை 28' ரிலீஸாகி 12 வருடம் நிறைவடைந்திருக்கிறது. இப்பட அனுபவம் குறித்து, மிர்ச்சி சிவாவிடம் பேசினேன். 

"குழந்தைகிட்ட கவிதை வாசிக்கிறதுதான் ட்ரம்ப் கார்ட்... ஆனா...?"  மிர்ச்சி சிவாவின் சென்னை-28 ரகசியம் #12YearsOfChennai28

''என் வாழ்க்கையில மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்த படம் இது. ஆர்ஜே வேலையில் இருந்த எனக்கு சினிமா கனவும் இருந்தது. அந்தக் கனவுக்கு சாவி, இந்தப் படம்தான். 'சென்னை 28' ஆடிஷன் நடக்குதுனு கேள்விப்பட்டு அங்கே போனேன். பலபேர் வந்திருந்தாங்க. எல்லோருக்கும் டயலாக் பேப்பரைக் கொடுத்து பேசச் சொன்னாங்க. எல்லோரும் பண்றதை நாம் ஏன் பண்ணனும்னு நினைச்சு, 'சென்னை 28'ல குழந்தைக்கு முன்னாடி நின்னு ஒரு கவிதை வாசிப்பேனே... அதைப் பேசி, நடிச்சுக் காட்டினேன். ஆடிஷன் பண்ண ஒருத்தர், 'இப்படியொரு சீன் இல்லையே'னு சொன்னார். 'இதை நீங்க டைரக்டர் சார்கிட்ட போட்டுக் காட்டுங்க'னு சொல்லிட்டு வந்துட்டேன். என் ஹியூமர் சென்ஸ் வெங்கட் பிரபு சாருக்குப் பிடிச்சிருந்ததுனால, கமிட் பண்னார். 

படம் ரிலீஸானதுக்குப் பிறகு, அந்த கவிதை சொல்ற காட்சியைப் பார்த்து பலரும் பாராட்டினாங்க. 'படத்துல உனக்கு முக்கியமான கேரக்டர்'னு கமிட் பண்றப்போ சொன்னதை, காமெடினு நினைச்சுட்டேன். ஆனா, சொன்ன மாதிரியே படத்துல எனக்கு காதல் காட்சிகள், பாட்டுனு எல்லாமே இருந்தது. குறிப்பா, யுவன் இசையில் எஸ்.பி.பி சார் மற்றும் சித்ரா அம்மா பாடிய 'யாரோ' பாட்டு செம ஹிட் ஆச்சு. படம் ரிலீஸுக்கு முன்னாடியே இந்தப் பாட்டு பட்டி தொட்டியெல்லாம் ஹிட். இந்தப் பாட்டோட ஷூட்டிங் ரோட்டோரத்துல ஒரு காபி ஷாப்ல எடுத்தாங்க. இதே படத்துல  நடிச்ச அரவிந்த் ஆகாஷுக்கு ஒரு பாட்டு பாங்காங் போய் ஷூட் பண்ணிட்டு வந்தாங்க. அதுதான் ஒரே வருத்தம். 

"குழந்தைகிட்ட கவிதை வாசிக்கிறதுதான் ட்ரம்ப் கார்ட்... ஆனா...?"  மிர்ச்சி சிவாவின் சென்னை-28 ரகசியம் #12YearsOfChennai28

தவிர, இந்தப் படத்தோட ஷூட்டிங் நடக்கிறப்போ ரோட்டுல நாங்க நடிக்கிறதைப் பார்க்க நாலு பேர்கூட இருக்கமாட்டாங்க. நானும், விஜயலட்சுமியும் 'பொத்திவெச்ச மல்லிகை மொட்டு' பாட்டுக்கு நடிச்சப்போ ரெண்டு பேர் நின்னு பார்த்தாங்க. அப்புறம் அவங்களும் போர் அடிக்குதுனு இடத்தைக் காலி பண்ணிட்டாங்க. படம் ரிலீஸானப்போ எங்க டீம் ஒன்னா சேர்ந்து ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தோம். காலையில தியேட்டர்ல அவ்வளவா கூட்டமில்ல. அப்புறம் படம் நல்லாயிருக்குனு பார்த்தவங்கெல்லாம் சொல்லிச் சொல்லி கொஞ்சம் கொஞ்சமா தியேட்டருக்கு ஆடியன்ஸ் வந்தாங்க. படமும் ஹிட் அடித்தது. 

"குழந்தைகிட்ட கவிதை வாசிக்கிறதுதான் ட்ரம்ப் கார்ட்... ஆனா...?"  மிர்ச்சி சிவாவின் சென்னை-28 ரகசியம் #12YearsOfChennai28

இந்தப் படத்துல நடிக்கிறவரை படம் பற்றி வீட்டுல யார்கிட்டேயும் சொல்லலை. ரிலீஸானதுக்கு அப்புறம்தான் நான் நடிச்சது வீட்டுக்குத் தெரியும். என் மொத்தக் குடும்பத்தோடு இந்தப் படத்தைத் தியேட்டரில் பார்த்தேன். படம் பார்த்தப்போ, எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. படம் ரிலீஸான ஒரு மாசத்துல இறந்துட்டார். ஆனா, என்னை ஹீரோவா எங்க அப்பா பார்த்துட்டார் என்ற ஆறுதல் கிடைச்சது. இந்தப் படம் எனக்கு மட்டுமில்ல, நடிச்ச எல்லோருக்கும் பெரிய அடையாளம். இதுல நடிச்ச எல்லோரும் இப்போவரைக்கும் நல்ல நண்பர்களா இருக்கோம். ஷூட்டிங் ஸ்பாட்ல நாங்க எப்போவும் ஜாலியா இருப்போம். படமும் செம ஜாலியா வரக் காரணம் அதுதான். தொடர்ந்து வெங்கட் பிரபு சார் டைரக்‌ஷன்ல 'சரோஜா' படம் பண்னேன். அப்புறம் என்னை மாஸாக்கி, 'தமிழ் படம்' எடுத்தார், சி.எஸ்.அமுதன். இதெல்லாத்துக்கும் முதல் காரணம், 'சென்னை 28' டீம்தான். எங்களை ஏத்துக்கிட்ட உலகத் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி!" என முடித்தார், மிர்ச்சி சிவா. 

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..