Published:Updated:

" 'வேதிகா நல்லா நடிச்சிருக்காங்க'னு விஜய் பாராட்டுவார்னு எதிர்பார்க்கவே இல்ல!" - வேதிகா

சனா

'காஞ்சனா 3' பற்றி நடிகை வேதிகா பேசியதிலிருந்து...

" 'வேதிகா நல்லா நடிச்சிருக்காங்க'னு விஜய் பாராட்டுவார்னு எதிர்பார்க்கவே இல்ல!" - வேதிகா
" 'வேதிகா நல்லா நடிச்சிருக்காங்க'னு விஜய் பாராட்டுவார்னு எதிர்பார்க்கவே இல்ல!" - வேதிகா

" 'காஞ்சனா 3' சூப்பர் ஹிட். படம் பார்த்துட்டு நிறைய ஆடியன்ஸ் போன் பண்ணி வாழ்த்தினாங்க. இதுவரை படத்தோட வசூல் மட்டும் 100 கோடின்னு சொல்றாங்க. இந்தப் படத்தை எங்க அம்மா கூட திரையரங்களில் பார்த்தேன். எங்க அம்மாவுக்குத் தமிழ் தெரியாது. ஆனா, படம் பார்த்துட்டு விழுந்து விழுந்து சிரிச்சாங்க. நானே தியேட்டரில் படம் பார்க்கும்போது கொஞ்சம் பயந்துட்டேன்'' என்று பேச்சை ஆரம்பிக்கிறார் வேதிகா. 

" 'முனி'க்குப் பிறகு இடையில லாரன்ஸ் கூட நடிக்க வாய்ப்பு வரலையா?" 

" 'முனி' படத்துல நடிக்கிறப்போ எனக்கு 11 வயசுதான். காமெடி கலந்த பேய் படம்ங்கிற ஜானரை 'முனி' படம்தான் ஆரம்பிச்சு வச்சது. இந்தப் ஃபார்மெட்டை மற்ற மொழிகளிலும் ஃபாலோ பண்ணாங்க. ஆனா, இதற்கான விதை லாரன்ஸ் மாஸ்டர் போட்டதுதான். அதுக்கு அப்புறம் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடிச்சேன். இடையில் ஒரு படத்துல நடிக்க லாரன்ஸ் மாஸ்டர் என்கிட்ட கேட்டார். ஒன்லைன்கூட சொன்னார். சில காரணங்களால் அந்தப் படம் எடுக்க முடியாம போயிடுச்சு. இப்போ திரும்பவும் 'காஞ்சனா 3' படத்துக்காக லாரன்ஸ் மாஸ்டர் என்கிட்ட கதை சொன்னார். மூணு ஹீரோயின்ஸ் படத்துல இருந்தாலும், என் கேரக்டருக்குத் தேவையான முக்கியத்துவத்தை மாஸ்டர் கொடுத்திருந்தார். உடனே ஓகே சொல்லிட்டேன்."

"ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருந்தது?" 

"ரொம்ப ஃபன்னா இருக்கும். படத்துல நான் மாடி ஏறும்போது அங்கே ஒரு பேய் நின்னுக்கிட்டு இருக்கும். பார்த்து நான் அலறி விழற மாதிரி ஒரு சீன் இருக்கும். இந்தக் காட்சியைப் படமாக்கும்போது மாஸ்டர் பேய் நிற்கும்னு சொல்லவே இல்லை. நான் மாடிப் படி ஏறிப் போறேன். அங்கே ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வெள்ளை கலர் டிரெஸ்ல நீளமான முடியை வச்சுக்கிட்டு நின்னுட்டிருக்காங்க. நிஜமாவே அலறியடிச்சு விழுந்துட்டேன்."  

" 'காஞ்சனா 4' வருமா?"

"கண்டிப்பா 'காஞ்சனா 4' வரும்; அதுல எந்த சந்தேகமும் இல்லை. 'காஞ்சனா 4' கதைக்காக ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுன்னு காமெடியா கேட்டார் லாரன்ஸ் மாஸ்டர். 'காஞ்சனா' கதையை அவரைவிட யாரும் சரியா யோசிக்க முடியாது." 

" 'காவியத் தலைவன்' படத்துக்குப் பிறகு இடைவெளி ஏன்?"

"எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்த படம் இது. நடிக்கிறதுக்கு நிறைய ஸ்கோப் இருந்தது. நான் ஒரு கிளாசிகல் டான்ஸ்டர். அதை வெளிப்படுத்துறதுக்கான வாய்ப்பை இந்தப் படம் கொடுத்துச்சு. விஜய் சார் இந்தப் படத்தைப் பார்த்து, என் நடிப்பைப் பாராட்டி ஒரு வீடியோ பேட்டியில் பேசியிருந்தார். அது ரொம்ப சந்தோஷமா இருந்தது. இதுவரை என் நடிப்புக்குக் கிடைச்ச பெரிய பாராட்டா நான் அதைத்தான் பார்க்குறேன். 

'காவியத் தலைவன்'ல நடிச்ச அனுபவத்தை மறக்கவே முடியாது. இந்தப் படத்துக்குப் பிறகு மற்ற மொழிப் படங்களில் என் கவனத்தைச் செலுத்தினேன். மலையாளப் படத்துல நடிச்சேன். பி.வாசு சார் கன்னடத்துல இயக்கிய 'சிவலிங்கா' படத்துல சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாருக்கு ஜோடியா நடிச்சேன். தொடர்ந்து மலையாள டாப் ஹீரோஸ் ப்ரித்விராஜ், திலீப், இந்திரஜித் படங்களில் நடிச்சேன். அதனாலதான் தமிழில் நடிக்க முடியல. தவிர, இந்த கேப்ல என் படிப்பையும் வெளிநாட்டில் முடிச்சுட்டு வந்தேன். இப்போ சில தமிழ்ப் பட வாய்ப்புகள் வருது. சீக்கிரமே குட் நியூஸ் வரும்."  

"இந்தியில் என்ட்ரி கொடுக்கப்போறீங்கனு கேள்விப்பட்டோமே?"

"ஆமா, என்னோட முதல் பாலிவுட் படமான 'body' ஷூட்டிங் போயிட்டிருக்கு. ஜித்து ஜோசப் சார் டைரக்ஷன். ப்ரித்விராஜ் சார் கூட நான் நடிச்ச 'James & Alice'  மலையாளப் படத்தைப் பார்த்து, இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்திருக்கார் ஜித்து ஜோசப். பெரிய டைரக்டர் படத்துல நடிக்கிறது சந்தோஷமா இருக்கு. இம்ரான் காஷிமுக்கு ஜோடியா நடிக்கிறேன். படத்துல நான் காலேஜ் ஸ்டூடண்ட். தவிர, தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் ஒன்றில் கமிட் ஆகியிருக்கேன்."