Published:Updated:

பாலிவுட்டில் தயாராகும் காஞ்சனா! - திருநங்கையாக நடிக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்

பாலிவுட்டில் தயாராகும் காஞ்சனா! -  திருநங்கையாக நடிக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்
பாலிவுட்டில் தயாராகும் காஞ்சனா! - திருநங்கையாக நடிக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்

தமிழில் தன் 'காஞ்சனா' ஹாரர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இந்தியில் அந்தப் படத்தை ரீமேக் செய்ய உள்ளார் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ். ஹாரர் காமெடி ஜானர் படங்களில் `முனி' சீரீஸ் ஒரு நல்ல மினிமம் கேரண்டி படங்களாகவே இதுவரை தமிழ் சினிமாவில் இருந்துள்ளது. வணிக ரீதியிலும், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரையும் கவரும் வகையிலும், முனி-காஞ்சனா வரிசையில் வரும் படங்கள் எல்லாமே வெற்றிப்படமாகவும் இருந்து வருகின்றன.

பாலிவுட்டில் தயாராகும் காஞ்சனா! -  திருநங்கையாக நடிக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்

இந்நிலையில், இந்தப் படத்தைத் தற்போது பாலிவுட்டுக்குக் கொண்டு செல்கிறார் லாரன்ஸ். இது குறித்து படக்குழுவினர் கூறுகையில், ``இந்தியில் `காஞ்சனா' (முனி-2) படம் `லக்‌ஷ்மி பாம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில், ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். அதேபோல, சரத்குமார் நடித்த வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார். இதற்கு முன் கியாரா அத்வானி, `எம்.எஸ் தோனி' உட்படப் பல வெற்றிப்படங்களில் இந்தியில் நடித்தவர்.

பாலிவுட்டில் தயாராகும் காஞ்சனா! -  திருநங்கையாக நடிக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்

`காஞ்சனா-3' தமிழில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது `லக்‌ஷ்மி பாம்' படத்தின் ஷூட்டிங்கை மும்பையில் தொடங்கினார் ராகவா லாரன்ஸ்.