Published:Updated:

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் அசத்திய சூர்யா மகன்!

சனா
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் அசத்திய சூர்யா மகன்!
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் அசத்திய சூர்யா மகன்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி சூர்யா- ஜோதிகா திருமணத்துக்கு முன்பு இருவரும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கின்றனர். திருமணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்த ஜோதிகா, `36 வயதினிலே' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா தற்போது இவரின் அண்ணன் தயாரிக்கும் படத்தில் மைத்துனர் கார்த்தியுடன் சேர்ந்து நடிக்கிறார். இதில் ஜோதிகா, கார்த்தி இருவரும் அக்கா, தம்பியாக நடிக்கின்றனர்.

இந்த நிலையில், ஜோதிகா சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் காட்டிலும் எப்போதும் அவரின் குடும்பத்தின் மீதும் அதிகம் கவனத்துடன் இருப்பார். குறிப்பாக இவர்களின் குழந்தைகளான தியா, தேவ் இருவரின் படிப்பின் மீது ஜோதிகா எப்போதும் மிகுந்த கவனத்துடன் இருப்பார். இந்நிலையில், தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் தேவ் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார். தமிழகத்தில் இருந்து இந்தப் போட்டியில் 40 நபர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் தண்டர்கேக் பிரிவில் தேவ் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்தப் போட்டியை சூர்யாவும், ஜோதிகாவும் நேரில் கண்டு ரசித்துள்ளனர். 

தேவ் போன்றே இவரின் அக்கா தியாவும் விளையாட்டுத் துறையில் அதிகம் ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று பல கோப்பைகளையும் வென்றுள்ளார்.