Published:Updated:

`குட்பை சொல்ல வந்தார்; நான் கவனிக்கல, அவ்வளவு நேரம் காத்திருந்தார்!'- விஜய் குறித்து கத்ரீனா கைப் பகிர்ந்த சுவாரஸ்யம்

மலையரசு

நடிகர் விஜய்யுடன் கோகோ கோலா விளம்பரத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்.

நடிகர் விஜய், கோகோ கோலா விளம்பரத்தில் நடித்திருந்தார். அதில், அவருடன் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பும் நடித்தார். ஊட்டியில் இந்தப் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து தற்போது கத்ரீனா பேசியுள்ளார். voot இணையதளத்துக்காக அனைதா ஷ்ரூப்புக்கு அளித்த அந்தப் பேட்டியில், ``நடிகர் விஜய் பெரிய ஸ்டார். அவர் மிக அமைதியானவர். ஊட்டியில் ஷுட் முடிந்து நாங்கள் அனைவரும் உட்கார்ந்திருந்தோம். நானும் போனில் சாட் செய்து கொண்டிருந்தேன்.

அப்போது என் முன்னே இரண்டு கால்கள் வந்து நின்றன. நான் யாரோ நிற்கிறார்கள் என விட்டுவிட்டேன். அவர் யார் என்று பார்க்காமல் போனையே நோண்டிக்கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் ஆகிய பின்பும் அந்தக் கால்கள் அங்கேயே நின்றுகொண்டிருந்தன. சிறிது நேரம் கழித்து யார் என்று பார்த்தேன்.

அப்போதுதான் அது விஜய் எனத் தெரிந்தது. ஷுட் முடிந்துவிட்டதால் அவர் என்னிடம் குட்பை சொல்வதற்காக வந்திருந்தார். நான் போனில் பிசியாக இருந்ததால் என்னைத் தொந்தரவு செய்யாமல் அவ்வளவு நேரம் காத்திருந்துள்ளார்’ எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியிலும், வலைதளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.

மலையரசு